For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அலைமகளும்.. கலைமகளும்.. கொலுவிருக்கும் ராத்திரி... நவராத்திரி.. சுப ராத்திரி!

Google Oneindia Tamil News

Recommended Video

    நவராத்திரி கொண்டாட்டம்..அருமையான கொலுக்கள்..ஒன்இந்தியா நேயர்களின் கொண்டாட்டம்- வீடியோ

    சென்னை: இதோ வந்து விட்டது நவராத்திரி திருவிழாவின் கிளைமேக்ஸ். ஆயுத பூஜை இன்று தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரி விழாவின் சிறப்பம்சமே கொலுதான். கொலு வைப்பது பேஷன் போல இல்லாமல் நமது பாரம்பரியத்தையும், திருவிழாவின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் மாறி வருகின்றன.

    இன்றைய தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தையும், நமது கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கும் கருவியாக இந்த கொலு பயன்படுகிறது. அத்தோடு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை இளம் தலைமுறைக்கு புகட்டவும் இதை மக்கள் பயன்படுத்துகின்றனர். இதோ நமது வாசகர்கள் வீட்டு கொலு காட்சிகள்.

     சுகன்யா ரங்கராஜன்

    சுகன்யா ரங்கராஜன்

    நமது வாசகர் திருப்பூரைச் சேர்ந்த சுகன்யா ரங்கராஜன் வீட்டு கொலுவின் அழகிய காட்சிகள். பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இந்த கொலுவில் இடம் பெற்றுள்ள கடவுள் சிலைகள்.

     11வது ஆண்டாக

    11வது ஆண்டாக

    11வது ஆண்டாக தங்களது வீட்டில் கொலு வைத்திருப்பதாக கூறுகிறார் சுகன்யா ரங்கராஜன். லட்சுமி, சரஸ்வதி, துர்கைக்கான விழாவான நவராத்திரியின்போது வைக்கப்படும் கொலு முப்பெரும் தேவியரைப் போற்றும் வைபவம் ஆகும்.

     ஆரோக்கியமும், மகிழ்ச்சியும்

    ஆரோக்கியமும், மகிழ்ச்சியும்

    நவராத்திரி பண்டிகையின்போது முப்பெரும் தேவியரையும் வணங்கி அவர்களது அருள் பெற்று அனைவரும் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் பெற்று சிறப்புடன் திகழ வேண்டும் என்றும் சுகன்யா ரங்கராஜன் வாழ்த்தியுள்ளார்.

     வாசகர் குமார்

    வாசகர் குமார்

    இது நமது வாசகர் ஐஎஸ்பி குமார் அனுப்பியுள்ள கொலு காட்சி. வித்தியாசமான பொம்மைகளுடன் இந்த கொலு களை கட்டியுள்ளது.

     சந்தைகள்

    சந்தைகள்

    இதில் சந்தை காட்சி அடங்கியுள்ளது. கொலு என்றாலே வித்தியாசமான சிந்தனைகளுடன் கூடியதாக தற்போது மாறி வருவதை இது காட்டுகிறது.

    English summary
    Navaratri festival has come to an end and the people are gearing up for the celebration of Saraswathi poojai and Vijayadasami.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X