For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீதும் நன்றும் பிறர் தர வாரா.. சசிகலா குடும்பத்தினர் சிறை தண்டனை குறித்து எச் ராஜா கருத்து!

சசிகலா குடும்பத்தினர் வரிசையாக சிறை தண்டனை பெற்று வருவது குறித்து எச் ராஜா டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா குடும்பத்தினர் வரிசையாக சிறை தண்டனை பெற்று வருவது குறித்து எச் ராஜா டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசி உறவினர் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய பாஸ்கரன் வருமானத்தை விட அதிகமாக ரூ.1.68 கோடி சேர்த்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

Good and bad will not come by others : H Raja

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பாஸ்கரன் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது. பாஸ்கரனின் மனைவி ஸ்ரீதலாவுக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரி ஏய்ப்பு புகாரில் சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, அவரது அண்ணி இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் திண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவராக சிறை தண்டனை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா சசிகலா குடும்பத்தினர் சிறை தண்டனை பெறுவது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள், தினகரன் சகோதரி சீத்தலா விற்கும் 3 ஆண்டுகள், அவரது கணவர் பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தீதும் நன்றும் பிறர் தர வாரா என எச் ராஜா டிவிட்டியுள்ளார்.

English summary
H Raja tweets about Sasikala family members prison sentence. He said good and bad will not come by others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X