• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் குட்மார்னிங்.. ராத்திரி குட் நைட்.. வாட்ஸ்ஆப் பாவம்ப்பா.. விட்ருங்கப்பா!

|
  தேவையில்லாத மெசேஜ்களால் குப்பை வண்டியாகும் போன்- வீடியோ

  சென்னை: குட்மார்னிங்-குட்நைட் மெசேஜ்களுக்கு ஒரு குட் பை சொல்லியே ஆகணும்.

  இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிகொண்டே போகிறது. ஆனால் தகவல் பரிமாற்றத்துக்கும் அவசிய தேவைக்கும்

  செல்போனை பயன்படுத்துவர்களின் எண்ணிகை குறைவு என்றே சொல்லாம். அவசர, அவசியங்களை தவிர க்ரீட்டிங் மெசேஜ் எனப்படும் குட்மார்னிங்-குட்நைனிங் போட்டோ மெசேஜ்களை நிறைய பேர் அனுப்பி கொண்டு இருக்கின்றனர். சிலர் இதை ஒரு வாடிக்கையாகவே வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

  ஒருவருன் நட்பை வளர்த்துக் கொள்ளவும், உறவை நீட்டிக்கொள்ளவும் ஒருவித பாலம் அவசியம்தான். அதற்காக குட்மார்னிங்-குட்நைட் மெசேஜ்களை அனுப்பிதான் தொடர வேண்டும் என்றில்லையே?

  ஆய்வின் பகீர் தகவல்

  ஆய்வின் பகீர் தகவல்

  இதுபோன்ற குட்மார்னிங்-குட்நைட் போட்டோ மெசேஜ் அனுப்புகள்தான், இந்தியாவில் வலம் வரும் அனைத்து வித ஸ்மார்ட் போன்களுகளிலும் இடம் அதாவது ஸ்பேஸ் இல்லாமல் அடைத்துக் கொள்வதாக ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது.உலகிலேயே அதிக அளவில் செல்போனை பயன்படுத்தும் அமெரிக்கர்களைவிட இந்தியர்களிடம் உள்ள செல்போனில்தான் ஸ்பேஸ் இல்லாமல் போகும் பிரச்சனை ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது. அதுமட்டுமில்லை, இந்த காரணத்தினால்தான் 90 சதவீத செல்போன்கள் ஹேங் ஆவதாகவும் அந்த ஆய்வறிக்கையின் முடிவில் தெரியவந்துள்ளது.

  மண்டையை குடையும் வேலை

  மண்டையை குடையும் வேலை

  இந்த மெசேஜ்களை அனுப்புவர் வேண்டுமானால் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். எல்லோருக்குமே எல்லா நேரத்துக்கும் அது மகிழ்ச்சியை கொடுத்துவிடாது. என்னமோ ஏதோ என்று செல்போனை எடுத்து பார்த்தால் குட்மார்னிங் மெசேஜ் இருக்கும்போது, 'இவனுக்கு வேற வேலை இல்லை' என்று சலிப்பவர்களும், ஏன் எரிச்சல் அடைபவர்களும் சிலர் உண்டு. ஒருவர் நமக்கு குட்மார்னிங்-குட்நைட் மெசேஜ் அனுப்புகிறார் என்றால், அவருக்கு பதிலுக்கு திரும்ப அனுப்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அத்துடன், இன்று எந்த மாதிரியான மெசேஜ் போட்டோ மெசேஜ் அனுப்பலாம், எந்த வாசகத்துடன் அனுப்பலாம் என மண்டையை போட்டு குடைந்து நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பது.

  திணறும் வயதானவர்கள்

  திணறும் வயதானவர்கள்

  இப்போது வயதானவர்களும் வாட்ஸ் அப்-ல் நுழைய ஆரம்பித்துவிடுவதால், அவர்களுக்கு என்ன வாட்ஸ்அப்பில் என்ன மாதிரியான தகவல்களை அனுப்புவது என்று பெரும்பாலும் தெரிவதில்லை. தெரிந்ததெல்லாம் இந்த குட்மார்னிங்-குட்நைட் மெசேஜ்கள்தான். எனவே வயதானவர்கள்தான் அதிக அளவு அத்தகைய மெசேஜ் படங்களை கூகுளில் தேட ஆரம்பிப்பதாக கூகுள் ஆய்வு சொல்கிறது. இவ்வளவு ஏன்? தினமும் காலைல 5 மணிக்கு யோகா செய்யும்போது பிரதமர் மோடியும் கூடகுட்மார்னிங்-குட்நைட் மெசேஜ்களை அனுப்புவதாக கூகுள் ரிப்போர்ட் சொல்கிறது. இதை தவிர, பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து படங்கள், பண்டிகைகளில் அந்தந்த கடவுள்களின் புகைப்பட மெசேஜ்கள், தேட ஆரம்பித்து செல்போனின் டேட்டாக்கள்தான் வீணாகின்றன. இவையெல்லாம் கூட வருடங்களுக்கு ஒருமுறை வருவது என்பதால் பாதிப்பில்லை. ஆனால் குட் மார்னிங், குட்நைட் மற்றும் மீம்ஸ் ஜோக்குகள் மெசேஜ்களினால் செல்போனில் இடம் அடைத்துக் கொள்வதால் அதை எப்படி அழிப்பது என்று கூட வயதானவர்களுக்கு தெரிவதில்லை.

  தேவையில்லாத வெட்டி வேலை

  தேவையில்லாத வெட்டி வேலை

  ஒரு க்ரூப்ல் 100 பேர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த மெசேஜ் அனுப்புவதால் 100 பேரும் அதை 100 பேரும் டவுன்லோடு செய்ய வேண்டியிருக்கும். இதனால் நெட்தான் வீணாகிறது. அதற்கு திருப்பி பதில் மெசேஜ் போட குறைந்தது 10 பேராவது மீண்டும் படங்களை டவுன்லோடு செய்வார்கள். குறைந்தபட்சம் குரூப்பில் இதுபோன்ற மெசேஜ்களை போடாமல் உபயோகமாக போடுவது நல்லது. இந்த வெட்டி கலாச்சாரம் வாட்ஸ் அப்-ல் மட்டும் இல்லை. இப்போது ட்விட்டரிலும் இந்த கலாச்சாரம் நுழைந்துவிட்டதுதான் வேதனை. அதைவிட கொடுமை அன்றைய போட்டோக்களை உட்கார்ந்து மெனக்கெட்டு அழித்து கொண்டிருக்க நேரிடுகிறது. எனவே இதுபோல் தேவையற்ற மெசேஜ்களை அனுப்பி மற்றவர்களின் நேரத்தை வீணடிப்பதையோ, அவர்களின் செல்போனில் நெட் வீணடிப்பதையும், அவர்களது செல்போனில் இடங்களை ஆக்கிரத்து ஹாங் ஆக செய்வதையோ இனியாவது குறைத்து கொள்ள முயல்வது நல்லது. ஒருநாளை மகிழ்ச்சியுடனும், இனிமையுடனும், புத்துணர்ச்சியுடனும் ஆரம்பிக்க குட்மார்னிங் என்ற போட்டோ மெசேஜ் தேவையில்லை.

  வீணாகும் பொன்னான நேரம்

  வீணாகும் பொன்னான நேரம்

  உபயோகமான தகவல்கள், வீடியோக்கள், தலைவர்களின் பேச்சுக்கள், முன்னோர்களின் பொன்மொழிகள் என எவ்வளவோ அதே கூகுளில் கொட்டிக் கிடக்கிறது. படித்தவர்களும், பெரியவர்களும் அவற்றினை இளைய தலைமுறைகளுக்கு அவற்றினை தெரியபடுத்த நேரம், நெட் போன்றவற்றினை செலவு செய்து வழங்க மெனக்கெட்டால் கூட பரவாயில்லை. அதேபோல, நாட்டில் இருக்கிற பிரச்சினைகளை அறிய வேண்டியதும், செய்ய வேண்டியதும் எவ்வளவோ இருக்க, இப்படி குட்மார்னிங்-குட்நைட் போட்டோ மெசேஜ் அனுப்பிக்கொண்டும் இளைஞர்கள் நேரத்தை கழிப்பதும் வேதனை தருகிறது. உங்களது பொன்னான நேரங்களை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இளைஞர்கள், தேவையில்லாத ஆப்களை (app) டவுன்லோடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இப்போது டவுன்லோடு செய்யப்படும் பெரும்பாலான ஆப்கள், செல்போன் பயன்படுத்துபவரின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பிறகுதான் டவுன்லோடு ஆகின்றன. எனவே இதுபோன்ற ஆப்களால் ஆபத்துதான் ஏற்படும்.

  செல்போன்-ஒரு அற்புத வளர்ச்சி

  செல்போன்-ஒரு அற்புத வளர்ச்சி

  செல்போன் - ஒரு அபரிமிதமான அற்புதமான தொழில்நுட்ப வளர்ச்சி. அதை வெட்டி குட்மார்னிங்-குட்நைட் மெசேஜ்களை அனுப்புவதைவிட்டு விட்டு, ஆக்கப்பூர்வ செயல்களுக்காக பயன்படுத்திக் கொள்ள ஒவ்வொருவரும் முயல வேண்டும்.இன்றொன்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், குட்மார்னிங்-குட்நைட் நீங்கள் ஒருவருக்கு சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அன்றைய பொழுது விடியதான் போகுது-பொழுது முடியதான் போகுது. அப்படித்தான் பல யுகங்களாக நடந்துகொண்டிருக்கிறது-இனியும் நடக்கும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  No need to put photo messages in the Wattsapp without need. By putting daily GoodMorning-GoodNight Messages, time and time are wasted, as well as the net and data of others. This caused the problem without the location of the cell
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more