For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி லாலி: கலர்ஃபுல் டூடுள் போட்ட கூகுள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஹோலி பண்டிகையை கூகுள் அழகான டூடுள் போட்டு கொண்டாடியுள்ளது.

ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்தத்தை வரவேற்க மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவி மகிழ்கிறார்கள். பருவ மழை பொய்த்துவிட்டதால் தண்ணீரை வீணடிக்காமல் ஹோலி கொண்டாடுமாறு பல பிரபலங்கள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

Google celebrates Holi with colourful Doodle

இந்நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி கூகுள் வண்ணமயமான டூடுள் போட்டுள்ளது. கூகுள் பக்கத்திற்கு சென்றால் "Google" என்ற வார்த்தையின் மீது வண்ணம் பட்டு அழகாகிறது.

வசந்தத்தின் துவக்கத்தை குறிக்கவும், தீயவைகளை நல்லவை வெற்றி கொள்வதை கொண்டாடவும் தான் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியா, கனடா, ஸ்வீடன், லாத்வியா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, கென்யா, ஜப்பான், தென் கொரியா, தைவான் மற்றும் இந்தோனேசியாவில் ஹோலி டூடுள் போடப்பட்டுள்ளது.

பண்டிகைகள் தவிர்த்து பிரபலங்கள், உலக தலைவர்களின் பிறந்தநாளுக்கும் கூகுள் டூடுள் போடும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Google has celebrated holi festival by displaying a colourful Doodle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X