For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாட்ஸ்அப்புக்கு போட்டியாக ஆப்.. கோதாவில் குதித்த கூகுள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: வாட்ஸ்அப்புக்கு போட்டியாக கூகுள் ஆலோ என்ற ஆப்பை களமிறக்கியுள்ளது. இதில் வாட்ஸ்அப்பிலுள்ள வசதிகளைவிட சற்று அதிக வசதி இணைக்கப்பட்டுள்ளது.

உலக தகவல் தொடர்பு புரட்சிக்கு வித்திட்டுள்ள, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்கள் மார்க் ஸக்கர்பெர்க் ஆளுகையில் உள்ளது.

இதற்கு போட்டியாக கருதப்பட்ட கூகுள் பிளஸ், ஹேங் அவுட், மெசேஞ்சர் போன்ற கூகுளின் தகவல் பரிமாற்ற அப்ளிகேஷன்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Google introduces two new communication apps to the world. Called Allo and Duo

இருப்பினும் விடா முயற்சியோடு களமிறங்கியுள்ள கூகுள், ‘ஆலோ' என்ற ஆப்பை, வாட்ஸ்அப்புக்கு போட்டியாக களமிறக்கியுள்ளது. மெசேஜ்களை பாதுகாக்க ‘என்கிரிப்ஷன்' வசதியும், நமக்கு வரும் மெசேஜ்களுக்கு தானாக பதில் வழங்கும் ஆப்ஷன்களும் இதில் உள்ளன.

டுவோ ஆப்பை பொருத்தளவில் எளிதாக வீடியோ காலிங் செய்யமுடியும். வீடியோ காலிங் ஆப்களில் டுவோ ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு ஆப்களும் ஆன்டிராய்டு மற்றும் ஐ-ஓஸ் மொபைல் தளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பர்சனல் தகவல் திருட்டு அபாயம் இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது, அந்த தகவல் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படுகிறது. இதை வர்த்தக நிறுவனங்கள் தவறான நோக்கத்திற்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்துதான், விழித்தெழு வாட்ஸ்அப் என்ற பெயரில் சமீபத்தில் டிவிட்டரில் பயனாளிகள் ஹேஷ்டேக் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Google introduces two new communication apps to the world. Called Allo and Duo, the search giant hopes that users will choose them over competitors' solutions. The question is, why should consumers care?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X