For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2014-ம் ஆண்டுக்கு குட்பை சொல்லும் கூகுள் டூடுல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஆண்டின் நிறைவுபகுதி வந்தடைந்துள்ள நிலையில், கூகுள் தனது டூடுல் மூலம் அதை கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பப்பட்டதும் இடம் பெற்றுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், சுதந்திரதினம், குடியரசு தினம் போன்ற முக்கியமான நிகழ்வுகளின்போது, கூகுள் தனது தேடுபொறியின், லோகோவில் அந்த நிகழ்வுக்கு ஏற்ற படங்களை கிராபிக்சில் இணைத்து டூடுலாக வெளியிடுவது வழக்கம்.

Google makes Indians happy by featuring the Mars Orbiter mission in its year end Google Doodle

அதேபோன்று, புத்தாண்டு நாளை பிறக்க உள்ள நிலையில் 2014ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை வைத்து கூகுள் தனது டூடுலை இன்று வெளியிட்டுள்ளது. கூகுள் சர்ச் இன்ஜினுக்கு சென்றதும் கிராபிக்ஸ் படங்கள் மோஷனில் ஓடுவதை பார்க்க முடியும்.

இதில் உலக கோப்பை கால்பந்து உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுடன் மங்கள்யான் விண்கலம் விண்ணில் பாய்வது போன்ற கிராபிக்ஸ் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ஐஸ்பக்கெட் சேலஞ்ச், ஸ்மார்ட் போனில் வெளியான பிளாப்பி பேர்ட் என்ற கேம், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்த ரோபோ சார்ந்த ஆய்வான ரோசேட்டா போன்றவையும் கூகுள் டூடுலில் மிளிர்கின்றன.

English summary
It's the end of the year, and Google has made all Indians happy by featuring the Mars Orbiter mission in its year end Google Doodle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X