For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்கள் இந்த பஸ் ஸ்டாப்பில் தான் இறங்க வேண்டும்... பயணிகளுக்கு அலர்ட் கொடுக்கும் கூகுள் மேப்!

கூகுளில் மேப்பில் பஸ் ஸ்டாப் குறித்த தகவல்கள் அடங்கிய புதிய அப்டேட் வர இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: கூகுளில் மேப்பில் பஸ் ஸ்டாப் குறித்த தகவல்கள் அடங்கிய புதிய அப்டேட் வர இருக்கிறது. இதன் மூலம் கூகுள் மேப் நாம் எந்த பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும் என்பதை அதுவே நமக்கு சொல்லும்.

இந்த தொழிநுட்பம் மிகவும் துல்லியமாக செயல்படும் என்று கூறப்படுகிறது. இது முக்கியமாக இந்திய பயனாளிகளையும் சுற்றலா செல்லும் மக்களையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

கூகுள் மேப்பில் வர இருக்கும் இந்த புதிய வசதியால் இனி பஸ் ஸ்டாப்கள் குறித்த குழப்பங்கள் தீரும். முக்கியமாக நடத்துனரிடம் ''ஸ்டாப் வந்ததும் சொல்லுங்க'' என்ற கெஞ்சல்களுக்கு முடிவு வரும்.

கலக்கும் மேப்

கலக்கும் மேப்

உலகமே ஒரு கைக்குள் இருக்கும் என்பதை சரியாக நிரூபித்தது கூகுள் மேப்ஸ் மட்டுமே. இதன் மூலம் உலகின் எந்த இடத்திற்கும் யாரிடமும் வழி கேட்காமல் சென்று விட முடியும். தற்போது உலகிலேயே மேப் பயன்பாடுகளில் கூகுள் மேப்ஸ் தான் முதல் இடம் வகிக்கிறது. சமீப காலமாக இதில் வரும் அப்டேட்கள் அனைத்தும் இந்திய பயனாளர்களை குறி வைத்து வெளியாகிக் கொண்டு இருக்கிறது.

பஸ் ஸ்டாப் நோட்டிபிகேஷன்

பஸ் ஸ்டாப் நோட்டிபிகேஷன்

தற்போது இதில் பஸ் ஸ்டாப் குறித்து நோட்டிபிகேஷன்களை கொடுக்கும் அப்டேட் வர இருக்கிறது. இதன் மூலம் நாம் எந்த பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும் என்று மேப்ஸ் நமக்கு நோட்டிபிகேஷன் அளிக்கும். இந்த நோட்டிபிகேஷன் ஆங்கிலம் மட்டும் இல்லாமல் எல்லா மொழியிலும் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. உதாரணமாக வடபழனியில் இருக்கும் போது பவர் ஹவுஸ் பஸ் ஸ்டாப்பிற்கான நோட்டிபிகேஷன் வழங்கப்படும்.

மெட்ரோ ரயிலுக்கும்

மெட்ரோ ரயிலுக்கும்

இந்த வசதி பேருந்துக்கு மட்டும் இல்லாமல் ரயிலுக்கும் வழங்கப்படும். அதன்படி லோக்கல் ரயில்கள், மெட்ரோ ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் என அனைத்திற்கும் இந்த நோட்டிபிகேஷன் வரும். வெறுமனே எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கூகுள் மேப்பில் கொடுத்தால் போதும் அதுவே நமக்கு ஸ்டாப் வருவதற்கு முன்பு நோட்டிபிகேஷன் அளித்துவிடும்.

பைக்கில் கூட செல்லலாம்

பைக்கில் கூட செல்லலாம்

கடந்த சில நாட்களாக வாட்சப் போலவே கூகுள் மேப்ஸிலும் நிறைய அப்டேட்கள் வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு பைக்கில் செல்பவர்கள் பயன்படுத்தும் வகையில் கூகுள் மேப்பில் அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டது. பைக்கில் டிராபிக் இல்லாமல் எங்கு செல்லலாம் என்று இந்த அப்டேட்டில் தகவல்கள் இருந்தது. இது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

English summary
Google Maps now alert users about public transport stops. It will add this feature in upcoming update. From this update we can easily find out the next stops in bus. Google maps will send push notification about the stop. So it will be easy to find the stops in new area. Google maps has recently released bike option in update.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X