For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டுப்பாட்டு டவரில் மோதிய திருச்சி ஏர்இந்தியா விமானம்.. எப்படி நடந்தது? அதிகாரிகள் குழப்பம்!

திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் சிறிய விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கட்டுப்பாட்டு டவரில் திருச்சி ஏர்இந்தியா விமானம் மோதியது எப்படி?- வீடியோ

    திருச்சி: திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் கட்டுப்பாட்டு கோபுரத்தின் மீது மோதியது எப்படி என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    அதிகாலை 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. திருச்சியில் இருந்து அந்த ஏர்இந்தியா விமானம் துபாய் நோக்கி சென்றுள்ளது. இந்த விமானம் விமான நிலையத்தின் முடிவில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரமான ஏடிசி டவர் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம்) மீது மோதியுள்ளது.

    உள்ளே 130 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இருந்துள்ளனர். இதனால் நிலைதடுமாறி கொஞ்சம் சுற்று சுவரில் இடித்துள்ளது. அதன்பின் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    [ நிலைதடுமாறி கட்டுப்பாட்டு டவர் மீது மோதிய ஏர்இந்தியா விமானம்.. திருச்சியில் பரபரப்பு!]

     அனைவரும் பாதுகாப்பு

    அனைவரும் பாதுகாப்பு

    மும்பையில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 130 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். இவர்கள் வேறு விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பப்பட இருக்கிறார்கள்.

    எப்படி நடந்தது

    ஆனால் இது எப்படி நடந்தது என்று தெரியாமல் அதிகாரிகள் இன்னும் குழம்பி வருகிறார்கள். மூன்று முறை அதிகாரிகள் இந்த விபத்து நடந்த இடத்தை சோதனை செய்துவிட்டனர். ஆனாலும் எதனால் விமானம் சம்பந்தம் இல்லாமல் கட்டுப்பாட்டு டவரின் மீது மோத வேண்டும். எப்படி விமானம் அவ்வளவு நெருக்கமாக சென்றது என்று சோதனை செய்து வருகிறார்கள்.

     ஏன் தாழ்வு

    ஏன் தாழ்வு

    அதேபோல் விமானம், கட்டுப்பாட்டு கோபுரத்தில் இடிக்கும் அளவிற்கு எப்படி தாழ்வாக சென்றது என்றும் சோதனை செய்து வருகிறார்கள். திருச்சி விமான நிலையை ஓடு பாதை போதிய நீளம் கொண்டதுதான். ஆனாலும் கூட எப்படி இந்த சம்பவம் நடந்தது என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கிறார்கள்.

    என்ன டவர்

    இந்த டவர் ஏடிசி டவர் என்று அழைக்கப்படும் ஏர் டிராபிக் கண்ட்ரோல் எனப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் ஆகும். இதை வைத்துதான் விமான போக்குவரத்து நெரிசலை ஒவ்வொரு விமான நிலையத்திலும் சமாளிப்பார்கள். எந்த விமானம் எப்போது புறப்பட வேண்டும், எது எப்போது உள்ளே வர வேண்டும் என்று தீர்மானிப்பார்கள். இதில்தான் அந்த விமானம் மோதியுள்ளது.

    English summary
    Trichy- Dubai Air India flight with 136 passengers on board hit the ATC compound wall at Trichy Airport yesterday and was diverted to Mumbai. The flight had got damaged under the belly, was declared fit for operations after inspection at Mumbai Airport. Officials researching the place.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X