For Daily Alerts
Just In
நான் எப்ப மதுசூதனை ஆதரித்துப் பிரச்சாரம் பண்றேன்னு சொன்னேன்... கவுண்டமணி மறுப்பு!
சென்னை: ஆர்.கே. நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாக வெளியான செய்திகளை நடிகர் கவுண்டமணி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் கவுண்டமணி இன்று கூறியுள்ளதாவது:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாக வந்த தகவலில் உண்மையில்லை.

தாம் எந்தக் கட்சி வேட்பாளரையும் ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதும் இல்லை. எந்த ஒரு கட்சியையும் நான் சேர்ந்தவனும் இல்லை.
இவ்வாறு கவுண்டமணி தெரிவித்துள்ளார்.