For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்படி செய்யலாமா சார்?.. "அங்க போய் பேசுங்க.. கவர்மண்ட் எம்பிளாயிட்ஸ் மட்டும்தான் ஏத்துவேன்"!

Google Oneindia Tamil News

தென்காசி: "அங்க போய் பேசுங்க.. கவர்மண்ட் எம்பிளாயிட்ஸ் மட்டும்தான் பஸ்ஸில் ஏத்துவேன்" என்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அரசு பஸ்ஸில் ஏற்க மறுத்துள்ளார் கண்டக்டர் ஒருவர்.. ஆம்புலன்ஸ் ஊழியர்களை பஸ்ஸில் ஏற்ற மறுக்கும் சம்பவம் குறித்த வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.

Recommended Video

    இப்படி செய்யலாமா சார்?.. 'அங்க போய் பேசுங்க.. கவர்மண்ட் எம்பிளாயிட்ஸ் மட்டும்தான் ஏத்துவேன்'

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள்.

     gov employees: nellai bus conductor not allowed to travel 108 ambulance employees in gov bus

    இந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள், ஊழியர்கள் நெல்லை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில், தினமும் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட வேண்டும்.. அதன்பிறகு தான் பிறகு வெவ்வேறு இடங்களுக்கு பணிக்கு செல்வது வழக்கம்.

    அதன்படி, சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு ஊழியர்களுக்கு பஸ் ஒன்று இயக்கப்பட்டும் வருகிறது. இந்த பஸ்ஸில் முன்பெல்லாம் 108 பணியாளர்களை அனுமதித்தனர்... ஆனால் இப்போதெல்லாம் சில நாட்களாக அனுமதி மறுக்கப்படுகிறாம்.. இதற்கு காரணம், இவர்கள் எல்லாம் ஒப்பந்த ஊழியர்களாம்.. அதனால் யாரெல்லாம் அரசு ஊழியர்களோ அவர்களை மட்டும்தான் அந்த பஸ்ஸில் ஏற்றுவோம் என்று சொல்கிறார்களாம்.

    இந்த கொரோனா காலத்தில், ரிஸ்க் அதிகமாக இருப்பது தெரிந்தும, களத்தில் நின்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை பார்த்து வருவது பெரிய விஷயம்.. இதை கணக்கில் எடுத்து கொள்ளாமல், கவர்ன்மென்ட் எம்பிளாயிகளுக்கு மட்டும்தான் சலுகை காட்டுவோம் என்பதை ஏற்க முடியவில்லை.

    "மீனு மீனேய்".. காசிமேட்டில் அதிகாலையிலேயே குவிந்த கூட்டம்.. காற்றில் பறந்த சமூக இடைவெளி!!

    ஒப்பந்த ஊழியர்கள் என்பதாலேயே இவர்களுக்கு பஸ்ஸில் ஏற்ற அனுமதி மறுக்கப்படுவதும் சரியில்லை.. சமூக ஆர்வலர்கள் இதை பற்றி குற்றம்சாட்டி கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். பஸ்ஸில் ஒப்பந்த ஊழியர்களையும் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

    "108 ஒரு அத்தியாவசிய ஊழியர்கள்தானே.. அவங்களும் கவர்ன்மென்ட் அண்டர்டேக் ஸ்டாப் தானே.. அவங்களை ஏத்திட்டு போக" என்று பஸ் ஸ்டாண்டில் இருந்த பொதுமக்கள் இது சம்பந்தமாக பஸ் கண்டக்டர், டிரைவரிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.. அதற்கு "அங்க போய் பேசிக்குங்க.. கவர்ன்மென்ட் ஸ்டாப்ங்க மட்டும் வண்டியில ஏறட்டும்" என்கிறார் கண்டக்டர்.

    English summary
    gov employees: nellai bus conductor not allowed to travel 108 ambulance employees in gov bus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X