For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழியர் குவார்ட்டர்ஸில் குடித்தனம்.. திடீர்னு ஒரு நாள் யுவராஜையும் காணோம்.. கவிதாவும் மிஸ்ஸிங்!

கள்ளக்காதல் விவகாரத்தினால் அரசு அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: கள்ளக்காதலியுடன் தனியா வீடு எடுத்து தங்கி இருக்கிறார் என்றுதான் நினைத்தார்கள்.. ஆனால் அந்த பெண்ணுடன் சுற்றுலா துறை அரசு அதிகாரி மாயமாகியே விட்டாராம். இதையடுத்து அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராமேஸ்வரம், தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் யுவராஜ். இவருக்கு வயது 40. இவருக்கு ரேகா என்ற மனைவி, ஒரு குழந்தையும் உள்ளனர்.

ராமேஸ்வரத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார் யுவராஜ். இந்நிலையில், சென்னையில் யுவராஜ் வேலை பார்க்க நேரிட்டது.

சென்னை

சென்னை

அப்போது, கூட வேலை பார்த்த கவிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த கவிதா என்பவர், அங்கேயே வேலை பார்க்கும் ஊழியரின் மனைவி ஆவார். கவிதாவுடனான பழக்கம் கள்ளக்காதலாக மாறிவிட்டது. நாளடைவில் கவிதாவை தன்னுடைய மனைவி என்றே சொல்ல ஆரம்பித்துள்ளார்.

தம்பதி

தம்பதி

அப்படித்தான் ராமேஸ்வரம் தமிழ்நாடு ஓட்டலில் உள்ள ஊழியர் குவார்ட்டர்ஸிலும் தங்கினார். இதனால் நிறைய பேர் இவர்களை தம்பதி என்றே முடிவு செய்துவிட்டார்கள். யாருக்கும் எந்த சந்தேகமும் வரவே இல்லை.

தனி குடித்தனம்

தனி குடித்தனம்

இந்நிலையில், கவிதாவை காணவில்லை.. யுவராஜையும் காணவில்லை.. 13ம் தேதி, வேலைக்கு போன கணவர், வீட்டிற்கு வரவில்லை என்று மனைவி ரேகா துடிதுடித்து போய்விட்டார். பல இடங்களில் விசாரித்தபிறகுதான், தனி குவார்ட்டஸில் குடித்தனம் நடத்தி வந்தது விஷயம் தெரிந்தது.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

இதனால் கணவரை எப்படியாவது கண்டுபிடித்து தருமாறு, 21ம் தேதி, ராமேஸ்வரம் மகளிர் ஸ்டேஷனில், ரேகா புகார் தந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார், விசாரணை நடத்தி வந்தது. இது தொடர்பாக யுவராஜை, பணியில் இருந்தும் தற்போது சஸ்பெண்ட்' செய்து, சுற்றுலா துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Rameswaran Tourism Department staff suspended due to his disorderly act
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X