For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலாத்கார மிருகங்களை விட ஈவு இரக்கமே இல்லாத கொடூரர்கள் இவர்கள்தான்...!

மாற்றுத் திறனாளி பயணியை பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மாற்று திறனாளியை தாக்கி கீழே தள்ளிய பேருந்து ஊழியர்கள்- வீடியோ

    மதுரை: எதுக்குமே ஒரு ஈவு இரக்கம் வேணாமா? செய்ற தப்பை தட்டி கேட்டா அதுக்கு இன்னொரு மன்னிக்க முடியாத தப்பை செய்யறதா?

    மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு மாநகர பேருந்து சோழவந்தான் நோக்கி சென்று கொண்டிருந்தது. சமயநல்லூர் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் சிலர் அந்த பஸ்ஸில் ஏற தயாராக நின்றிருந்தனர். ஆனால் பஸ் அந்த ஸ்டாப்பில் நிற்காமல், கொஞ்ச தூரம் தள்ளி போய் நின்றது. இதனால் பயணிகள் ஓடிப்போய் அதில் ஏறினர்.

     ஸ்டாப்பில் ஏன் நிறுத்தல?

    ஸ்டாப்பில் ஏன் நிறுத்தல?

    ஒவ்வொருவராக ஏறியபின் கடைசியாக ஒரு பயணி ஏற முயன்றார். அவர் ஒரு மாற்றுத் திறனாளி. பெயர் முருகன். அதனால் அவரை கண்டக்டர் வேகமாக ஏறும்படி அவசரப்படுத்தினார். அதற்கு முருகன் டிரைவரிடம், "ஏன் இப்படி அவசரப்படுகிறீர்கள்? பஸ் ஸ்டாப்பில் நிறுத்த வேண்டியதுதானே?" என்று கேட்டார்.

     தகாத வார்த்தைகள்

    தகாத வார்த்தைகள்

    இப்படி கேட்டதும் கண்டக்டருக்கும், டிரைவருக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தங்களை எப்படி கேள்வி கேட்கலாம் என்று ஆத்திரம் மண்டைக்கேறி தகாத வார்த்தைகளால் முருகனை திட்ட தொடங்கினர். அப்போதும் ஆவேசம் அடங்காத இருவரும், "நீ கீழே இறங்கு... நீ இறங்கினால்தான் பஸ் எடுப்போம்" என்று தகராறு செய்தனர்.

     அராஜகத்தின் உச்சம்

    அராஜகத்தின் உச்சம்

    ஆனால் முருகனோ, "நான் ஏன் இறங்க வேண்டும்? நான் என்ன தப்பு செய்தேன்?" என்றார். எவ்வளவு சொல்லியும் கீழே இறங்காததால், டிரைவரும், கண்டக்டரும் முருகனை சரமாரியாக அடித்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் முருகனை மாற்றுத் திறனாளி என்றும் பாராமல் பஸ்ஸிருந்து கீழே தள்ளிவிட்டனர். இதனை கண்ட பொதுமக்களும், மற்ற பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் கண்டக்டர், டிரைவர் நடத்திய இந்த அராஜகத்தை செல்போனில் படமெடுத்தனர். இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

     தொலைந்துபோன மனிதாபிமானம்

    தொலைந்துபோன மனிதாபிமானம்

    பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அரசு துறை ஊழியர்களுக்கு பாடமா எடுக்க முடியும்? அரசு ஊழியர்கள் என்ற எண்ணம் இல்லாட்டியும் ஒரு சராசரி மனிதன் அல்லது மாற்றுத் திறனாளியை அடிக்கிறோம், கீழே தள்ளிவிடுகிறோம் என்ற அடிப்படை உணர்வு கூடவா கண்டக்டருக்கும், டிரைவருக்கும் இல்லாமல் போய்விட்டது. வர வர மனிதாபிமானத்தை காற்றில் தொலைத்து கொண்டிருக்கும் இது மாதிரி சில நபர்களை பார்த்தாலே, நாம் தமிழர்கள்ன்னு சொல்லிக் கொள்ளவே வெட்கமா இருக்கு!

    English summary
    Government bus driver and conductor attack handicapped passenger in Madurai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X