For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் மோதல்... 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்- வீடியோ

திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி -மதுரை நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து மணப்பாறை அருகே வந்தபோது, திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது இப்பேருந்தின் பின்னால் வந்த தனியார் பேருந்து அரசுப் பேருந்தை நடுவழியில் திடீரென நிறுத்துவார்கள் என்பதை அறியாத காரணத்தால், அப்பேருந்தின் மீது வேகமாக மோதியது.

 government and private buses hit each other and 30 travelers got severe injury.

இதனால் தனியார் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அதில் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வளநாடு போலீசார் இந்த விபத்தை வழக்காகப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் விபத்துகள் நடைபெற்றால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து தீர்வுகளை காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

English summary
In Madurai- Trichy highways government bus and private bus hit each other and 30 travelers got severe injury. They are all admitted in Manapparai government hospitals for treatment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X