For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு ஊழியர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிய உத்தரவு

அரசு ஊழியர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : அரசுப் பணியாளர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் அரசுச் செயலர் வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

Government staffs should wear id cards at the duty time

அரசுப் பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில் அவர்களது நிழற்பட அடையாள அட்டையினைத் தவறாமல் அணிய வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்களது பெயர் மற்றும் பதவி ஆகியவை அதில் குறிப்பிடப்பட வேண்டும்.

அடையாள அட்டைகளின் பணியாளர்களின் பெயரையும், பதவிகளையும் மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றன் கீழ் ஒன்றாக இடம்பெற்றுள்ளதை மாற்றியமைக்க வேண்டும். உரிய அடையாள அட்டைகளை துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட அட்சியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசு அலுவலகங்களில் அரசுப் பணியாளர்கள் யார், இடைத்தரகர்கள் யார் என்று தெரியாமல் மக்கள் அவதியடைவதாகவும், லஞ்சத்தில் சிக்கித் தவிப்பதாகவும் புகார் எழுந்தது. இதனை தவிர்க்கும் வகையில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu government secretary sent a circular to all department secrearies to wear ID cards compulsory for government employees at their duty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X