For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துப்பாக்கியால் சூடப்பட்ட சிறுவனின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்: ஜெயலலிதா

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: நீலாங்கரை காவல் ஆய்வாளரின் கைத்துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் தமீம் அன்சாரியின் முழு மருத்துவ செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, நீலாங்கரை காவல் நிலையத்தில் 7.1.2014 அன்று குற்றம் சம்பந்தமாக விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த முகமது ஹனிபா என்பவரின் மகன் தமீம் அன்சாரியிடம், அந்தக் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டிருந்த போது தவறுதலாக கைத்துப்பாக்கி வெடித்ததில், அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

இந்த சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் தமீம் அன்சாரிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, அந்த சிகிச்சைக்கான முழு மருத்துவ செலவினையும் அரசு ஏற்றுக்கொள்ளவும் ஆணையிட்டுள்ளேன்.

தமீம் அன்சாரி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமீம் அன்சாரியின் வறுமையான குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

English summary
The chief ninister Jayalalitha has announced that the Tamilnadu government will take over all the medical expenses for the gun shot boy Thameem Ansari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X