For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல்கலை. துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுடன் ஆலோசிக்க தேவையில்லை- ஆளுநர்

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுடன் ஆலோசிக்க தேவையில்லை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பேராசிரியை ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர் செய்தியாளர் சந்திப்பு

    சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுடன் ஆலோசிக்க தேவையில்லை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவரிடம் சூரப்பா நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    Governor Banwarilal Puorhit says about Surappa appointment

    அதற்கு அவர் கூறுகையில், பல்கலை. துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுடன் ஆலோசிக்க தேவையில்லை. தகுதியின் அடிப்படையிலேயே சூரப்பா நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தில் அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டன.

    3 மாநிலங்களில் இருந்து துணைவேந்தர் பணிக்காக மூவரை தேடல் குழு பரிந்துரை செய்தது. அதில் பொறியியல் பின்னணி கொண்டவர் சூரப்பா மட்டுமே என்பதால் அவரை நான் நேர்காணல் நடத்தி தேர்வு செய்தேன்.

    இதில் மாநில வாரியாக எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை. சூரப்பா நியமனத்தில் விதிமுறைகள் அனைத்தும் மதிக்கப்பட்டன. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியுமா? தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என விளம்பரம் தர முடியாது என்றார் ஆளுநர்.

    English summary
    Governor Banwarilal Purohit says about Surappa appointment. His appointment was purely on merit. No discrimination in this appointment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X