For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியாது என்று ஆளுநர் கூறிவிட்டார் - திருமாவளவன்

ஒரே கட்சியில் இருவரும் பிரிந்து சண்டை போடுகின்றனர். அதில் தலையிட முடியாது என்று ஆளுநர் கூறிவிட்டார் என்று ஆளுநர் கூறியதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பெரும்பான்மையை நிரூபிக்க தற்போது உத்தரவிட முடியாது என்றும் தற்போது இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என ஆளுநர் கூறியதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 19 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் தங்கியுள்ளனர். எனவே எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.

Governor not ready to intervene in Edappadi issue, says Thirumavalavan

இன்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டாக இன்று ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.

ஆளுநரை சந்தித்த பின் எதிர்க்கட்சிகள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது திருமாவளவன், தற்போதைய சூழ்நிலையில் சட்டப்படி தலையிட முடியாது என ஆளுநர் கூறிவிட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதிமுக இரு குழுவாக பிரிந்துள்ளதால் அதில் தலையிட முடியாது என ஆளுநர் தெரிவித்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள எம்எல்ஏக்களும் அதிமுகவினர்தான். அவர்கள் ஒரே கட்சிதான். வேறு கட்சியில் இணையவில்லை. தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று ஆளுநர் கூறியுள்ளார்.

ஆளுநர் தற்போது சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

English summary
VCK leader Thirumavalavan has said that GOvernor has refused to interevene in the Edappadi govt majority issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X