For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலூரில் இருந்து சென்னை திரும்பிய ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதி தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி

கடலூரில் ஆய்வு மேற்கொண்டுவிட்டு சென்னை திரும்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் மாமல்லபுரத்தில் இருவர் பலியாகிவிட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநர் பன்வாரிலால் பாதுகாப்பு வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு- வீடியோ

    கல்பாக்கம்: கடலூரில் ஆய்வு செய்து விட்டு சென்னைக்கு திரும்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பாதுகாப்பு வாகனம் மாமல்லபுரம் அருகே சாலையை கடந்தவர்கள் மீது மோதியதில் தந்தை, மகன் உள்பட 3 பேர் பலியாகிவிட்டனர்.

    தமிழக ஆளுநராக பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித் கடலூரில் வண்டிப்பாளையத்தில் இன்று ஆய்வு செய்ய சென்றார். அப்போது அவர் துப்புரவு பணிகளையும் மேற்கொண்டார்.

    பெண் அலறினார்

    பெண் அலறினார்

    இந்நிலையில் அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்தபோது அங்கிருந்த கீற்று மறைப்பை திறந்த பார்த்தார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த இளம்பெண் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை பார்த்ததும் அலறினார்.

    ஆளுநர் மீட்பு

    ஆளுநர் மீட்பு

    இதையடுத்து அவரை ஊர்மக்கள் சுற்றி வளைத்தனர். தகவலறிந்த போலீஸார் அவரை பாதுகாப்பாக மீட்டனர்.இந்த நிலையில் ஆளுநர் கடலூரில் இருந்து சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    ஆளுநரின் பாதுகாப்பு வாகனம்

    ஆளுநரின் பாதுகாப்பு வாகனம்

    அப்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் புதுகல்பாக்கம் அருகே சிலர் சாலையை கடந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அதிவேகமாக வந்ததாக கூறப்படும் ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் பாதசாரிகள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

    மூவர் பலி

    மூவர் பலி

    விபத்தில் உயிரிழந்தவர்கள் சுரேஷ் (33) மற்றும் அவரது மகன் கார்த்திகேயன் (10) ஆகியோர் ஆவர். மேலும் பேருந்துக்காக காத்திருந்த கவுசல்யா(70) காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

    English summary
    Governor's car hit pedestrians while he return from Cuddalore to Chennai after his review goes controversy. Two were died on convoy hits.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X