For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிகரிக்கும் ஆளுநர்களின் 'சல்லாப' சேட்டைகள்.... லேடீஸ் கிளப்புகளாக உருமாறும் ராஜ்பவன்கள்?

தென் மாநிலங்களில் ஒன்றின் ஆளுநர் பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    லேடிஸ் கிளப்புகளாக மாறும் ஆளுநர்களின் ராஜபவன்- வீடியோ

    சென்னை: தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். இது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. அண்மைகாலமாக ஆளுநர் மாளிகைகள் 'அந்தப்புரங்களாக' உருமாறி வருவது தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.

    மேகாலயா மாநில ஆளுநராக கடந்த ஆண்டு பதவி வகித்த தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சண்முகநாதன் மீது நாட்டை அதிர வைக்கும் பாலியல் புகார்கள் கூறப்பட்டன. மேகாலயா ராஜ்பவன் ஊழியர்கள் 100க்கும் அதிகமானோர் சண்முகநாதனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

    ஆர்.எஸ்.எஸ். சண்முகநாதன் ராஜினாமா

    ஆர்.எஸ்.எஸ். சண்முகநாதன் ராஜினாமா

    மேகாலயா ராஜ்பவனையே லேடீஸ் கிளப்பாக மாற்றிவிட்டார் சண்முகநாதன் என்பதும் குற்றச்சாட்டு. பாஜகவை அதிரவைத்த இந்த குற்றச்சாட்டுகளால் சண்முகநாதன் வேறுவழியே இல்லாமல் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்துக்கு ஓடிவந்துவிட்டார்.

    என்.டி.திவாரி லீலை

    என்.டி.திவாரி லீலை

    அதற்கு முன்னதாக 2009-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான என்.டி. திவாரி, ஆந்திராவின் ஆளுநராக இருந்த போது பாலியல் சேட்டைகளில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் என்.டி.திவாரியும் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

    சென்னா ரெட்டி குறித்து ஜெ. விமர்சனம்

    சென்னா ரெட்டி குறித்து ஜெ. விமர்சனம்

    இதற்கெல்லாம் முன்னதாக 1991-96 ஆம் ஆண்டு காலம் தமிழகத்தின் ஆளுநராக இருந்தவர் சென்னாரெட்டி. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஆளுநர் சென்னா ரெட்டி தம்மிடம் தவறாக நடக்க முயன்றதாக சட்டசபையிலேயே கூறி பரபரப்பை கிளப்பினார்.

    பாலியல் புகாரில் வட மாநில ஆளுநர்

    பாலியல் புகாரில் வட மாநில ஆளுநர்

    இந்திரா காந்தி நாட்டின் பிரதமராக இருந்த போது வடமாநில ஆளுநராக இருந்த ஒருவர் மீதும் இத்தகைய பாலியல் புகார் எழுந்தது. பின்னர் இந்த சர்ச்சை ஓய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A new controversy erupted over One of the Southern State Governor's sexual misconduct issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X