For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளிக்கு நெரிசலுக்கு தீர்வு- சென்னையில் 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகையின்போது சென்னையின் முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வெளியூர் பேருந்துகளை வெவ்வேறு இடங்களில் இருந்து பிரித்து இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்தெந்த இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி படிக்கும், வேலை செய்யும் லட்சக்கணக்கான மக்கள், பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்கின்றனர். 3 அல்லது 4 தினங்கள் தொடர்ந்து விடுமுறை வந்தாலே இப்போது சொந்த ஊர் செல்வதை ஏராளமானோர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலில் திணறிப் போகிறது சென்னை மாநகரம்.

கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து வடபழனி வழியாக வந்து தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியைக் கடக்கவே பல மணிநேரங்கள் ஆகிவிடும். எனவே தீபாவளி பண்டிகை தினத்தில் இதுபோன்ற போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சென்னை மாநகரத்தை மையமாக கொண்டு தெற்கு, வடக்கு, மேற்கு என பிரித்து 3 இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் பகுதியாகவும் கோயம்பேடு உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் இப்பகுதியில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மாநகரின் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மணிக்கணக்கில் சாலைகளில் காத்திருந்து உடல் சோர்வுடன், மனஉளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு போக்கு வரத்துக் கழகங்கள் சார்பில் தினமும் 1,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில் சுமார் 4 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படும்.

ஆலோசனைக்கூட்டம்

ஆலோசனைக்கூட்டம்

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிடும். எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளைப் பல்வேறு இடங்களில் இருந்து பிரித்து இயக்குமாறு பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முதல்முறையாக, தீபாவளி பண்டிகைக்குச் சென்னையில் 3 முக்கிய இடங்களில் இருந்து வெளியூருக்குப் பேருந்துகள் இயக்குவதாக அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்மாவட்ட பேருந்துகள்

தென்மாவட்ட பேருந்துகள்

தென்மாவட்டங்களுக்குச் செல்லும் 40 சதவீத பேருந்துகளை வண்டலூர் அல்லது கூடுவாஞ்சேரியில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை பகுதி மற்றும் மாதவரத்தில் இருந்தும் பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும்.

நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை

நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை

பண்டிகை நாட்களின்போது சென்னை, புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வெளியூர் செல்பவர்கள் மட்டுமின்றி, பணி முடிந்து வீடு திரும்புபவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். வரும் தீபாவளி பண்டிகையின் போது, இவ்வாறு நேராமல் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், சென்னை மாநகரத்தை மையமாக கொண்டு தெற்கு, வடக்கு, மேற்கு என பிரித்து 3 இடங்களில் இருந்து பேருந்து களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
TN govt has decided to ply buses for Diwali from 3 points to avoid rush in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X