For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி மோசடி... அரசுப் பள்ளி ஆசிரியை கைது

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ரூ1 கோடி மோசடி செய்ததாககூறி அரசுப் பள்ளி ஆசிரியை வாரணாம்பிகையை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், திண்டல் அரசு உயர் நிலைப் பள்ளியில் வாரணாம்பிகை(48) என்பவர் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். படித்த இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாககூறி அவர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு வாரணாம்பிகை மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. மேலும், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக, ஈரோடு வட்டார காவல் நிலையம் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிலும் பல புகார்கள் வந்துள்ளன.

Govt., school teacher arrested

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வாரணாம்பிகை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையே ஆசிரியை வாரணாம்பிகை திடீரென தலைமறைவானார். மாவட்ட கல்வி அலுவலரும் அவரை வேலையில் இருந்து பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது தாய் வீட்டில் பதுங்கியிருந்த வாரணாம்பிகை மற்றும் அவரது மகன் தருண்ராஜ் ஆகியோரை, குற்றப்பிரிவு பிரிவு போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

English summary
Govt., school teacher arrested in Erode as she cheated nearly one crore rupees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X