For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊராட்சி நிதி... கல்லா கட்டினால் கடும் நடவடிக்கை... அரசு எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர்களாக புதிதாக பொறுப்பேற்றவர்கள் காசோலை விவகாரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

காசோலையை தவறாக பயன்படுத்தினால் உரியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊராட்சி நிதி பரிவர்த்தனைகளை கண்காணிக்க ஊராட்சிகளின் உதவி இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணி...? பரிசீலனை செய்யுமா தமிழக அரசு சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணி...? பரிசீலனை செய்யுமா தமிழக அரசு

புதியவர்கள்

புதியவர்கள்

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் cசெய்து கொண்டு அலுவல் பணிகளை தொடங்கிவிட்டனர். இத்தனை நாட்களாக தனி அலுவலர் வசம் இருந்த பொறுப்பு இப்போது முறையாக தலைவர், துணைத்தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

பணப் பரிவர்த்தனை

பணப் பரிவர்த்தனை

ஊராட்சி நிதி விவகாரத்தில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும், ஊராட்சி நிதியை தவறாக பயன்படுத்தினால் மாவட்ட நிர்வாகம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் செலவு

தேர்தல் செலவு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல லட்ச ரூபாய் செலவழித்து வெற்றிபெற்ற நபர்கள், பதவியில் அமர்ந்தவுடன் அந்த பணத்தை ஈட்டிவிடலாம் என மனக்கணக்கு போட்டிருக்கக் கூடும். ஆனால் அதற்கு வழியில்லாத வகையில் மாவட்ட நிர்வாகங்கள் கிடுக்கிப்பிடி போடத் தொடங்கியுள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ஊராட்சிகளில் காசோலை பண பரிவர்த்தனை செய்யும் அனைத்து அதிகாரமும் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கே உண்டு. இந்நிலையில், அந்த அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தக் கூடாது என்பதே வாக்களித்து வெற்றிபெற வைத்தவர்கள் உள்ளிட்ட அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

English summary
govt warns,action if the panchayat cheque is misused
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X