For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“ஜிபிஎஸ்” வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள்- விரைவில் தமிழகத்தில் அறிமுகம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் விபத்துகளில் சிக்கி போராடுபவர்களை காக்கும் ஆம்புலன்ஸ்களுக்கான ஜிபிஎஸ் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ மற்றும் சாலை விபத்துகளில் உயிருக்கு போராடுகிறவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கின்ற பணியை 108 ஆம்புலன்ஸ் செய்து வருகிறது.

தற்போது பொது மக்கள் பிரசவம், மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் இந்த சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

24 மணி நேர சேவை:

24 மணி நேர சேவை:

தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் இலவசமாக இச்சேவை அறிவிக்கப்படுவதால் பொது மக்கள் அதிகளவு பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

நவீன தொழில்நுட்பம்:

நவீன தொழில்நுட்பம்:

தினமும் 22 ஆயிரம் அழைப்புகள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு வருகின்றன. தற்போதைய சேவையை மேம்படுத்தும் வகையில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காலதாமதத்தைத் தடுக்க:

காலதாமதத்தைத் தடுக்க:

சென்னையில் உள்ள கட்டுபாட்டு அறையில் உள்ளவர்களும் முழு விவரங்களும் பெற்ற பின்னர் ஆம்புலன்ஸ் எந்த பகுதியில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து தகவல் தெரிவித்து அனுப்பப்படுகிறது. இதனால் கால விரயம் ஏற்படுகிறது.

ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம்:

ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம்:

அதனை தடுக்கும் வகையில் நவீன ஸ்மார்ட் போனில் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் மூலம் 108 க்கு போன் செய்தவுடன் அவர் எங்கிருந்து பேசுகிறார், எந்த பகுதியில் இருந்து அழைப்பு வந்துள்ளது என்பதை காட்டக் கூடிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஜிபிஎஸ் வசதி:

ஜிபிஎஸ் வசதி:

மேலும் ஆம்புலன்ஸ் எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் இந்த ஜி.பி.எஸ். வசதி உதவுகிறது.

எளிமையாகும் வசதி:

எளிமையாகும் வசதி:

இது தவிர அருகில் உள்ள மருத்துவ மனையை காட்டும் வசதியும், இதன் மூலம் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் இதன் மூலம் பெற முடியும். இந்த 3 சிறப்புகளும் இதன் மூலம் கிடைப்பதால் கால விரயம் வெகுவாக குறைகிறது.

பேரிடர் காலங்களில் அவசியம்:

பேரிடர் காலங்களில் அவசியம்:

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க இது பெரிதும் பயன்படும். பேரிடர் காலங்களில் இத்திட்டம் மிக உதவியாக இருக்கும்.

English summary
Soon, Tamil Nadu ambulance service got new technology oriented GPS system for ease access of callers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X