For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரண்டு பாட்டிகளைப் போட்டுத் தள்ளிய பேரன் – வெறும் நான்கு பவுன் நகைக்காக!

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: கோவையில் நான்கு பவுன் மதிப்புள்ள தங்க நகைகளுக்காக இரண்டு பாட்டிகளை கொலை செய்த பேரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை நகரிலுள்ள சவுரிபாளையம், இராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் எஸ்தர் கணவரை இழந்தவர்.

இவரது உறவினர் அய்யம்மாள். இவரும் கணவரை இழந்தவர்.

ஒரே வீட்டில் பாட்டிகள்:

இருவரும் நெருங்கிய உறவினர் என்பதால், ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

மர்மமாக இறப்பு:

இதில், அய்யம்மாள் மட்டும் அந்தப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு படுக்கச் சென்றஇருவரும், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

வீட்டிற்குள்ளேயே கொலை:

வீட்டின் அருகே இருந்த கழிவறைக்குள் எஸ்தர் உட்கார்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். வீட்டின் உள் இருந்த கட்டிலுக்கு அடியில் அய்யம்மாள் சடலமாக கிடந்தார்.

போலீசார் விசாரணை:

தகவலறிந்த மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் துணைக்கமிஷனர் பிரவேஷ்குமார், குற்றப்பிரிவு துணைக்கமிஷனர் ரம்யா பாரதி, உதவிக்கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

4 பவுன் நகைகள் மாயம்:

அய்யம்மாள் கழுத்திலிருந்த நகை, கம்மல் உள்ளிட்ட 4 பவுன் நகைகள் மாயமாகியிருந்தது.

உறவினர்களுக்கு தகவல்:

மூதாட்டிகள் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தபோது, அங்கு வந்த அய்யம்மாளின் பேரன் ரமேஷ் தான் இரண்டு பேரும் இறந்து கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ரமேஷிடம் விசாரணை:

வெளியாட்கள் யாரும் அந்த வீட்டிற்கு வந்த போனதற்கான தடயங்களோ இல்லாத நிலையில், சந்தேகம் கொண்ட போலீசார் ரமேஷிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒப்புக் கொண்ட பேரன்:

பாட்டியிடம் எப்போதுமே கொஞ்சம் பணம் இருக்கும் தவிர இருவரிடமும், நகையும் உள்ளது, மேலும், பாட்டி அய்யம்மாள் இறந்து போனால் அவரது சொத்து தனக்குத்தான் வரும் என்ற ஆசையில் பாட்டி அய்யம்மாளையும், லட்சுமியையும் கொலை செய்ததை நேற்று இரவு அவர் ஒப்புக்கொண்டார்.

English summary
Grandson killed her grandma and another old lady for gold. Police arrested him and filed case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X