For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை பட்ஜெட்: அம்மா குடிநீருக்கு ரூ.21 கோடி... கல்விக்கு ரூ.3.93 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை: சென்னை மாநகராட்சியில் ரூ.104.21 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்விக்கு வெறும் ரூ.3.93 கோடி நிதியும், அம்மா குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.21 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் 2016-17ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டை வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சே.சந்தானம் தாக்கல் செய்தார்.

Greater Chennai Corporation Budget Deficit at Rs 104 Crore

அதில் மொத்த வருவாய் ரூ.5019.30 கோடி, மொத்த செலவு ரூ.5123.51 கோடியாகவும் இருக்கும். எனவே, 104.21 கோடி பற்றாக்குறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பட்ஜெட்டில் சாலைகளுக்கு ரூ.2,170.25 கோடி, மழைநீர் வடிகால்வாய்கள் ரூ.415 கோடி, பாலங்கள் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மின்சாரம் ரூ.151 கோடி, திடக்கழிவு மேலாண்மை ரூ.19 கோடி,
  • இயந்திர பொறியியல் ரூ.13.76 கோடி, கட்டிடம் ரூ.50 கோடி,
  • கல்வி ரூ.3.93 கோடி (கடந்த பட்ஜெட்டில் ரூ.6.55 கோடி ஒதுக்கப்பட்டது),
  • சுகாதாரம் ரூ.4.31 கோடி, குடும்ப நலம் ரூ.2.04 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மெரினா கடற்கரை ஒட்டிய பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், உலக தரம் வாய்ந்த சாலைகள் அமைத்தல், நடை தொடர் மேம்பாலம், நவீன முறையில் நடைபாதைகள் அமைத்தல் போன்ற சிறப்பு திட்டங்களுக்காக ரூ.130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அம்மா குடிநீர் திட்டம் இவ்வாண்டு செயல்படுத்த ரூ.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேயர் சைதை துரைசாமி வெளியிட்ட அறிவிப்புகள் :

  • 10ம் வகுப்பு பொது தேர்வில் ஏதேனும் 3 பாடங்களில் அதிக மதிப்பெண் பெறும் சென்னை மாநகராட்சி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 10 ஆயிரம் ஊக்கத்தொகையும்,
  • பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு தலா ₹5 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் புதிதாக துணை செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும்.
  • சென்னை மாநகராட்சியின் இடமான அண்ணாசாலை, ரிச்சர்ட் பார்க்கில் ரூ.95 கோடி மதிப்பில் 16 மாடி கொண்ட ‘அம்மா' அலுவலக வளாகம் கட்டப்படும். • இதேபோல் ஷெனாய் நகரில் மாநகராட்சி இடத்தில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் அம்மா அலுவலக வளாகம் கட்டப்படும்.
  • அனைத்து மண்டலங்களிலும் வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பல அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் • ரூ. 125 கோடி மதிப்பில் கட்டப்படும்.மண்டலம் 5ல் உள்ள கண்ணப்பர் திடல் வணிக வளாகத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்திவிட்டு, ரூ. 825 கோடி மதிப்பீட்டில் 10 மாடி கொண்ட வணிக வளாகம் மற்றும் பயணியர் விடுதிகள் கட்டப்படும்.
  • தியாகராயநகரில் தணிகாசலம் தெரு மற்றும் தியாகராயர் சாலை சந்திப்பில் அடுக்குமாடி கார் மற்றும் பைக் நிறுத்தும் பார்க்கிங் வளாகம் கட்டப்படும்.

இவ்வாறு பல முக்கிய அறிவிப்புகளை சைதை துரைசாமி அறிவித்தார்.

English summary
The Greater Chennai Corporation's budget estimate for the first time exceeded Rs 5,000 crore for the first time as the Mayor announced a slew of projects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X