For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றாலம் பராசக்தி கல்லூரியில் பசுமை திருவிழா

இயற்கையை மையமாக வைத்து குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரில் பசுமை திருவிழா கொண்டாடப்பட்டது.

Google Oneindia Tamil News

நெல்லை: குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் பசுமை திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் காய்கனி அழகியாக மாணவி அப்னா சுஸ்மா தேர்வு செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி. இந்த கல்லூரியில் ஆண்டுத்தோறும் பொங்கல் பண்டிகை முதல் அனைத்து திருவிழாக்களும் மாணவிகளை கொண்டு கல்லூரியின் ஒவ்வெரு துறையின் சார்பில் கொண்டாடப்பாட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பொருளாதாரத் துறையின் சார்பில் இரண்டு தினங்கள் பசுமையை மையமாகக் கொண்டு 24 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 480 மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

Green Festival function in Courtallam Parasakthi College

பேச்சு, கட்டுரை, நடனம், பாட்டு, சிகை அலங்காரம், கைவிரல் நகத்தில் சிற்பம் வரைதல், மருதாணி இடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மேலும் பசுமை அழகி போட்டியும் நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் காய்கனிகளை உடையாக அணிந்து உலாவந்து அனைவரையும் கவர்ந்தனர். இந்த போட்டியில் காய்கனி பசுமை அழகியை தேர்ந்தேடுத்தல் நடைபெற்றது.

பசுமை அழகியாக 3ஆம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவி அப்னா சுஸ்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டியின் முக்கியய நோக்கமான இயற்கையை நாட வேண்டும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், இலை, தாழை, காய்கனிகளை அணிந்து சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதோடு மண்ணுக்கும், பயிர்களுக்கும் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இந்த பசுமை திருவிழா கொண்டாடபபட்டது.

English summary
Green Festival conducted by Courtallam Parasakthi College
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X