For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு மெத்தனம்.. ஸ்ரீவைகுண்டம் அணையை பசுமை தீர்ப்பாய நீதிபதிகளே நேரடியாக ஆய்வு செய்ய அதிரடி முடிவு

ஸ்ரீவைகுண்டம் அணையை பசுமை தீர்ப்பாய நீதிபதிகளே ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை ஸ்ரீவைகுண்டம் அணையை பசுமை தீர்ப்பாய நீதிபதிகளே ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ஏற்று அரசு நடவடிக்கை எடுக்காததால் நீதிபதிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணையை துார் வார வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து துார் வாரும் பணிகள் நடந்தபோது, மணல் கொள்ளை போவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

Green Tribunal judges have decided to review the srivaikundam Dam

அதையடுத்து, துார் வாரும் பணிக்கு தடை விதிக்கப்பட்டு, துார் வாரப்பட்ட பணிகள் குறித்து அறிக்கை அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஸ்ரீவைகுண்டம் அணையை பசுமை தீர்ப்பாய நீதிபதிகளே ஆய்வு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டது. பசுமை தீரப்பாய உத்தரவை ஏற்று அணையை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பசுமைத் தீர்ப்பாயம் இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

English summary
Green Tribunal judges have decided to review the srivaikundam Dam. The State government didnt accept the Green Tribunal's order, so the judges took the decision to review the dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X