For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் ரிசார்ட்டிலிருந்து வெளியேறிய குஜராத் எம்.எல்.ஏக்கள்.. ஆனா 'அது' மாதிரி வராதுங்க!

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு வார கால தங்கலுக்குப் பிறகு பெங்களூர் ஈகிள்டன் ரிசார்ட்டிலிருந்து குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கிளம்பிச் சென்றுள்ளனர்.

குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட்டில் ஜெயிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் கட்சியை உடைத்து எம்.எல்.ஏக்களைப் பணம் கொடுத்து வளைக்க தீவிரமாக முயன்று வருகிறது பாஜக. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக தனது 43 எம்.எல்.ஏக்களை கூட்டிக் கொண்டு பெங்களூரில் வைத்து அடை காத்தது காங்கிரஸ்.

Gujarat MLAs leave Bengaluru resort after a week's stay

பெங்களூர் அருகே உள்ள பிடதியில் ஆந்திரத் தொழிலதிபருக்குச் சொந்தமான ஈகிள்டன் ரிசார்ட்டில் கடந்த ஒரு வாரமாக இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இடையில் திடீரென வருமான வரித்துறை ரெய்டும் நடந்தது. எம்.எல்.ஏக்களை தங்க வைத்திருந்து அமைச்சர் டிகே.சிவக்குமார் ரெய்டில் சிக்கினார்.

இந்த நிலையில் தற்போது எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டை விட்டு கிளம்பி விட்டனர். இன்று அவர்கள் குஜராத் போய்ச் சேருகிறார்கள்.

என்ன இருந்தாலும் கூவத்தூர் மாதிரி வராதுங்க.. திராவிடம் திராவிடம்தான்.. தேசியம் தேசியம்தான்!

English summary
The Gujarat MLAs have left the Eagleton resort where they were holed up for over a week. The MLAs were brought in to the resort located 40 kilometres away from Bengaluru ahead of the Rajya Sabha elections in Gujarat in which Congress candidate Ahmed Patel is contesting. The elections will be held on August 8.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X