For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குட்கா விவகாரத்தில் லஞ்சம்.. அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்குங்க - மு.க.ஸ்டாலின்

குட்கா விவகாரத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: குட்காவை சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக போதைப்பொருள் விற்பனையாளர்கள்
அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சம் வழங்கியுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டசபையில் குட்கா விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Gutka scam: DMK walks out of Tamil Nadu Assembly

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், குட்கா விவகாரத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

நேரமில்லா நேரத்தில் குட்கா விவகாரம் குறித்து பேச அனுமதி கேட்டோம். குட்கா விவகாரத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். குட்கா விவகாரத்தில் வருமானவரித்துறை உண்மையை கூறியுள்ளது எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

English summary
Dravida Munnetra Kazhagam MLAs today staged a walkout from Tamil Nadu Assembly in connection with the gutka scam. DMK claimed that the answer given by Chief Minister E Palaniswami was inconclusive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X