For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் விஐபி என்ற பெயரில் குட்கா தயாரிப்பு ஆலை கண்டுபிடிப்பு.. எஸ்பி திடுக்கிடும் தகவல்

கோவையில் 6 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கோவை: 6 ஆண்டுகளாக கோவையில் செயல்பட்டு வந்த குட்கா ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட எஸ்.பி. மூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கோவையில் 6 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை 2 நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Gutkha production factory found in Coimbatore: SP

அந்த ஆலையில் இருந்த புகையிலையை ஆய்வு செய்ததில் அதில் குட்கா தயாரிக்கப்படும் மூலப்பெருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

விஐபி என்ற பெயரில் குட்கா தயாரிக்கப்பட்டது அம்பலமாகியிருப்பதாகவும் கோவை மாவட்ட எஸ்பி மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அப்போது குட்கா குடோனில் ரெய்டு நடத்த விடாமல் சிலர் முட்டுக்கட்டை போட முயன்றதாகவும் அவர் கூறினார். ரெய்டை தடுத்ததால் 7 பேர் கைது செய்யப்பபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குட்கா தயாரிப்பு விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய தனி புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்த குழுவில் 4 காவல் ஆய்வாளர்கள், 7 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 20 போலீஸ் கொண்ட தனி படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட எஸ்பி மூர்த்தி தெரிவித்தார்.

English summary
Coimbatore SP meets press today. He said Gutkha production factory has found in Coimbatore two days before. He also said that a separate intelligence team has been set up to arrest criminals in the Gudkha production case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X