For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னை நேரில் அழைத்து விசாரிக்க நீதிபதிக்கு அதிகாரம் இல்லை.. எச். ராஜா அதிரடி!

உயர்நீதிமன்றம் குறித்த தனது விமர்சனத்தை சென்னை ஹைகோர்ட் தானாக முன்வந்து விசாரிக்க கூடாது என எச் ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தானாக முன்வந்து விசாரிக்க நீதிமன்றத்திற்கு எச் ராஜா எதிர்ப்பு!

    சென்னை: உயர்நீதிமன்றம் குறித்த தனது விமர்சனத்தை சென்னை ஹைகோர்ட் தானாக முன்வந்து விசாரிக்க கூடாது என எச் ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை அருகே நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச் ராஜா உயர்நீதிமன்றத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்தார்.

    அவரது இந்த பேச்சு குறித்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக எச் ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    வக்கீல்கள் கோரிக்கை

    வக்கீல்கள் கோரிக்கை

    எச்.ராஜாவிற்கு எதிராக வழக்கு தானாக முன்வந்து விசாரிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    [இதெல்லாம் நிஜமாவே நடக்க போகுதா.. இல்லாவிட்டால் சும்மானாச்சுக்கும் அழைப்பா??]

    தானாக விசாரிக்க மறுப்பு

    தானாக விசாரிக்க மறுப்பு

    ஆனால் எச்.ராஜாவுக்கு எதிராக தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு எச் ராஜா குறித்து தாமாக விசாரிக்க மறுத்துவிட்டது.

    எச் ராஜாவுக்கு உத்தரவு

    எச் ராஜாவுக்கு உத்தரவு

    அதேநேரத்தில் நீதிபதிகள் சிடி செல்வம், நிர்மல் குமார் அமர்வு எச் ராஜா நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய வழக்கை தானாக வந்து விசாரிக்க முன்வந்தது. மேலும் 4 வாரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது.

    தானாக விசாரிக்க எதிர்ப்பு

    தானாக விசாரிக்க எதிர்ப்பு

    இந்நிலையில் தம்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது குறித்து எச்.ராஜா முறையீடு செய்துள்ளார். தலைமை நீதிபதி தஹில்ரமணி, துரைசாமி அமர்வு முன்பு எச்.ராஜாவின் வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார்.

    தலைமை நீதிபதி மட்டுமே

    தலைமை நீதிபதி மட்டுமே

    நீதிபதி சி.டி. செல்வம் தலைமையிலான அமர்வு தன்னிச்சையாக வழக்கு தொடர அதிகாரம் இல்லை எனவும் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிதான் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரமுடியும் என எச்.ராஜா முறையீடு செய்துள்ளார்.

    சட்டவிரோதமானது

    சட்டவிரோதமானது

    என்னை ஆஜராக உத்தரவிடும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இல்லை. தானாக முன்வந்து விசாரிக்கும் வழக்கில் ஆஜராக உத்தரவிட முடியாது என எச் ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தன்னை ஆஜராக சிடி செல்வம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும் எச் ராஜா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நகல்களை தாக்கல் செய்யுங்கள்

    நகல்களை தாக்கல் செய்யுங்கள்

    எச் ராஜா சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எஸ் தினகரன் இந்த முறையிட்டை முன்வைத்தார். அப்போது இதுதொடர்பான உத்தரவு நகல்களை தாக்கல் செய்யக்கோரிய தலைமை நீதிபதி தஹில் ரமணி இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

    English summary
    H. Raja appealed against the contempt of court case. Chief Justice Dahillramani, before the Duraiasamy session, H. Raja's lawyer has appealed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X