For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமித்ஷா மதுரை வரும் நேரத்தில் மத நல்லிணக்கத்திற்கு எதிராக எச்.ராஜா பேசுவது ஏன்?: ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மதுரைக்கு வருகின்ற நேரத்தில், மாநிலத்தில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் முயற்சியில் எச்.ராஜா போன்றவர்கள் பேசுவது கண்டனத்திற்குறியது என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் முகநூலில் கூறியுள்ளதாவது...

பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மதுரைக்கு வருகின்ற நேரத்தில், மாநிலத்தில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் முயற்...

Posted by M. K. Stalin onTuesday, June 30, 2015

பள்ளியில் தேர்வு எழுதும் நேரங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து செல்ல தடை விதிக்க வேண்டும் என்று எச்.ராஜா பேசியிருப்பது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

மதசார்பற்ற நாட்டில் பர்தா அணிந்து கொள்வது என்பது இஸ்லாமிய சமுதாயப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள சுதந்திரம் மட்டுமல்ல அவர்களின் உரிமையுமாகும் என்பதை மனதில் வைத்து இது போன்ற வெறுப்பூட்டும் பேச்சுக்களை தவிர்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.

மத நல்லிணக்கம் பேணும் தமிழகத்தில் அமைதிக்கு எந்த பங்கமும் வந்து விடாமல் எச்சரிக்கையாக இருப்பது அரசியல் கட்சிகளின் கடமை என்பதை உணர வேண்டும்.

இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
H.Raja break the secularism in Tamilnadu- M.K.Stalin condemn
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X