For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எவ்வளவு பெரிய பொய்.. கூசாம சொல்றாரு.. ஜோதிமணி, செந்தில் குமாரை அரெஸ்ட் பண்ணுங்க.. எச்.ராஜா ஆவேசம்!

செந்தில்குமார், ஜோதிமணி கைதாக வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: எவ்வளவு பெரிய பொய் பாருங்க நண்பர்களே.. கூசாம பொய் சொல்றாரு.. எம்பி ஜோதிமணியும், திமுக எம் பி செந்திலும் உடனே கைது செய்யப்பட வேண்டும்" என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கொந்தளித்து போய் ட்வீட் போட்டுள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ-க்கு எதிரான போராட்டம் 3-வது நாளாக தொடர்கிறது.. கலவரம், வெடித்தது.. தள்ளுமுள்ளு, போலீஸ் தடியடி.. மறியல்.. கைது.. விடுவிப்பு, என அடுத்தடுத்த நிகழ்வுகளின் பிரபிதிபலிப்புகள் நடந்தபடியே உள்ளன.

இதில் போராடிய இஸ்லாமிய பெண்களை போலீஸார் தாக்கியதாக கூறப்படுகிறது.. பெண்களை தாக்கியதாக கூறப்படும் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து திமுகதலைவர் முக ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

உஷார்

உஷார்

அதேபோல, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் ட்வீட்களை போட்டு கண்டனம் சொல்லி இருந்தார்.. "தேசப் பிரிவினைக்கு முன் இருந்த கலவரச் சூழ்நிலையைக்கொண்டுவரத் துடிக்கும் இஸ்லாமிய சதி துவங்கி விட்டது. மற்றுமொரு பிரிவினையை அனுமதியோம். இந்துகளே உஷார்", என்று எச்சரித்து ட்வீட் போட்டிருந்தார். எச்.ராஜாவின் இந்த ட்வீட்கள் எந்த அளவுக்கு பரபரப்பை தந்ததோ அதே அளவுக்கு பரபரப்பையும், சூட்டையும் கிளப்பி விட்டது திமுக எம்பி செந்தில்குமாரின் ட்வீட்களும்தான்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

"இஸ்லாமியர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் ஆள் ஆக நான் நிற்பேன்- சொன்னது நீ தானா, சொல் சொல். எங்க ரஜினிகாந்தை ஆள காணோம். கேட்டை திறந்த உங்க வாழ்க்கையை ஆரம்பித்த தமிழகம், அதே கேட்டை முடித்து வைக்கவும் தயங்காது என்று கூறியிருந்தார். திமுக எம்பியின் இந்த ட்வீட்தான் நேற்று ஹாட் டாபிக் ஆனது.. ஏராளமானோர் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் எதிர்ப்பாகவும் கமெண்டகளை பதிவிட்டனர்.

ரத்தம்

ரத்தம்

அதே சமயம், சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்த ஒருவர் காயமடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட தரையில் விழுந்து கிடப்பது போன்ற போட்டோ ஒன்றையும் பதிவிட்டு, இதற்கு காரணமான அதிமுக, டாக்டர் ராமதாஸ் அவர்கள் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் பாஜக அமல்படுத்திய சட்டத்திற்கு அதிமுக மற்றும் பாமக ஆதரவு அளித்ததன் விளைவுதான் இன்று தமிழகம் சந்திக்கும் இந்த நிலைமைக்கு காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

வருத்தம்

ஆனால், செந்தில்குமார் பதிவு செய்த அந்த போட்டோ சிஏஎ சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் காயம் பட்டவர் இல்லை என்றும், ஒரு விபத்தில் காயம்பட்டவரை என்றும் தவறுதலாக செந்தில்குமாரின் பதிவில் இருப்பதாகவும் பலர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து செந்தில்குமார் தன் பதிவிற்காக மன்னிப்பு கேட்டார்.. போட்டோவை தான் உறுதி செய்யாமல் பதிவு செய்ததாகவும், இனிமேல் இப்படிப்பட்ட தவறான பதிவுகள் வராமல் தான் கவனமுடன் இருக்க போவதாகவும் சொன்னார். செந்தில்குமார் தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதால், அதற்கும் பாராட்டுக்கள் குவிந்துவிட்டன.

கண்டனம்

அதேபோல, எம்பி ஜோதிமணியும் "சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லீம் வன்முறையாளர்களால் தாக்கப்பட்ட டிசி விஜயகுமாரி, ஆய்வாளர் ராஜ்குமார், பெண்காவலர் கலா ஆகியோரை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மருத்துவ மனையில் சென்று பார்வையிட்டார். வன்முறையாளர்கள் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால் நடவடிக்கை?" என்று பதிவிட்டிருந்தார். இவர்கள் 2 பேருக்குதான் எச்.ராஜா இப்போது கண்டனம் தெரிவித்துள்ளார்.

செந்தில்குமார்

இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். "சிஏஏ போராட்டத்தில் காவல்துறை நடவடிக்கையில் ஒருவர் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்களும் திமுக எம் பி செந்திலும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்" என்று எச்.ராஜா ட்வீட் போட்டுள்ளார். (செந்தில்குமாரை, சுருக்கமாக செந்தில் என்கிறார் எச்.ராஜா)

பொய் நண்பர்களே..

இன்னொரு ட்வீட்டில் ஜோதிமணியை குறிப்பிடும்போது, "எவ்வளவு பெரிய பொய் பாருங்கள் நண்பர்களே. காவல்துறை அதிகாரிகள் தான் முஸ்லீம் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டனர். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூசாமல் பொய் சொல்கிறார். சோனியா குடும்பமும், ஸ்டாலின் குடும்பமும் திட்டமிட்டு தேசத்திற்கு எதிராக வன்முறையை தூண்டுகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
bjp senior leader h raja condemns dr senthilkumar and mp jothimani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X