For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமர் படத்திற்கு இழிவு... கண்டிக்காத திமுக, அரசியல் கட்சிகள்... எச். ராஜா கொந்தளிப்பு!

ராமர் படத்தை இழிவுபடுத்திய செயலுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    கண்டிக்காத திமுக, அரசியல் கட்சிகள்...எச். ராஜா கொந்தளிப்பு!- வீடியோ

    சென்னை : மயிலாடுதுறையில் ராமர் படத்தை இழிவுடுபடுத்தியவர்களுக்கு எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ராமர் படத்தை இழிவு படுத்தியதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதததையும் எச். ராஜா விமர்சித்துள்ளார்.

    உத்திரபிரதேசத்தில் தொடங்கி தமிழகம் வழியாக மீண்டும் வடமாநிலத்தை நோக்கி ராமராஜ்ய ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. ராமர் கோவில் கட்ட வேண்டும், ராமர் ஆட்சியை உருவாக்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த ரதயாத்திரை கேரளா வழியாக திருநெல்வேலி மாவட்டம் புளியரைக்குள் நுழைந்து ராமேஸ்வரம் வழியாக பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

    H.Raja condemns the vandalism against Lord Ram at Mayiladuthurai

    தமிழகத்தில் தென்மாவட்ட அமைதியை சீர்குலைக்கும் வகையில் இந்த ரதயாத்திரை நடத்தப்படுவதாக விடுதலை சிறுத்தைகள், தமிழ் தேசிய அமைப்புகள், திராவிடர் கழகங்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் என்று போராட்டகளமாகியது.

    எனினும் எதிர்ப்புகளை மீறி எந்த தடையும் இன்றி ராமராஜ்ய ரதயாத்திரை தமிழகத்தை விட்டு சென்றுள்ளது. ரதயாத்திரை மதவாதமல்ல என்று பாஜகவினர் ஆதரவு தெரிவித்தனர். எதிர்மறை அரசியல் செய்பவர்களே ரதயாத்திரையை எதிர்ப்பதாகவும் தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

    இந்நிலையில் எச். ராஜா ட்விட்டரில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில் மயிலாடுதுறையில் ராமர் படத்தை இழிவு படுத்திய இழி செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். அமைதியாக நடைபெற்ற ராமராஜ்ய ரதயாத்திரைக்கு எதிராக கூச்சல் போட்ட திமுக உள்ளிட்ட கட்சிகள் இச்சம்பவத்தை கண்டிக்கவில்லை. இந்துக்கள் இந்த இந்து விரோத கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    BJP National secretary H.Raja tweeted that "The vandalism against Lord Ram at Mayiladuthurai is highly condemnable. I am surprised that DMK and others who held the assembly to ransom on Ram Rajya Rath Yatra didn't condemn this incident."
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X