For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமராஜ்ய ரதயாத்திரையை மதவாதம் என்பது வியப்பாக உள்ளது - எச் ராஜா

ராமராஜ்ய ரதயாத்திரையை மதவாதம் என்று சொல்வது வியப்பாக இருப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ரத யாத்திரை மதவாதமா?...எச்.ராஜா கேள்வி- வீடியோ

    சென்னை : ராமராஜ்ய ரதயாத்திரையை மதவாதம் என்று சொல்வது வியப்பாக இருப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார். நேர்மையான, தூய்மையான ஆட்சி தான் ராமராஜ்யம், இதனை எதிர்ப்பவர்களே ராமராஜ்ய ரத யாத்திரையை எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    முகநூலில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது : உத்திரபிரதேசத்தில் ராமஜென்ம பூமியில் இருந்து தொடங்கிவைக்கப்பட்ட ராமஜென்ம ரதயாத்திரை 5 மாநிலங்களில் அதனுடைய யாத்திரையை முடித்து இன்று காலையில் கேரளாவில் தொடங்கி செங்கோட்டையை அடைந்திருக்கிறது.

    இது தமிழகத்திலே மதுரை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்து மீண்டும் திருவனந்தபுரம் சென்று மீண்டும் மற்ற மாநிலங்களுக்கு செல்ல இருக்கிறது. இந்த யாத்திரையின் நோக்கம் ராமராஜ்யம். இந்த யாத்திரையின் பெயரே ராமராஜ்ய ரதயாத்திரை.

    ராம ராஜ்யம் என்றால் என்ன?

    ராம ராஜ்யம் என்றால் என்ன?

    ராமராஜ்ய ரதயாத்திரையை ஏதோ மதவாதம் என்றும் இதனை தடை செய்ய வேண்டும் என்றும் பேசுவது வியப்பாக உள்ளது. ஏனெனில் ராமராஜ்யம் என்பது தூய்மையான, நேர்மையான, ஒழுக்கமான ஆட்சி என்று மகாத்மா காந்தியே குறிப்பிட்டுள்ளார். காந்திஜி சுதந்திர இந்தியா பெற்ற உஉடன் ராமராஜ்ஜியம் ஏற்படுத்தப்படும் என்று கூறி இருக்கிறார். ஆனால் ஒழுக்கமான, தூய்மையான, நேர்மையான ஆட்சிக்கு எதிராக இருப்பவர்கள் இந்த யாத்திரையை எதிர்க்கிறார்கள்.

    ராமர் அரசியலமைப்பின் அங்கம்

    ராமர் அரசியலமைப்பின் அங்கம்

    இவர்களுக்கு ஒரு தகவல் சொல்ல விரும்புகிறேன், அரசியலமைப்பு ஏற்படுத்துவதற்கு முன்னர் சட்டம் கையால் எழுதப்பட்டது. அவை இன்றும் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த கையால் எழுதிய சட்டத்தில் முதல் பக்கத்திலேயே ராமரின் படம் தான் இருக்கிறது. ராமனின் படத்தை அரசியல் சட்டத்திலேயே வைத்துள்ளது, ராமர் நம் அரசியலமைப்பின் ஒரு அங்கம். அப்படி இருக்கும் போது ராமராஜ்ய ரதயாத்திரை வரக்கூடாது என்று எதிர்ப்பவர்கள் யார்?

    எதிர்ப்பவர்கள் யார்?

    எதிர்ப்பவர்கள் யார்?

    வைகோ, திமுக மற்றும் தீவிரவாத மதமாற்றும் சக்திகளின் ஏஜென்டுகள் தான் இதனை எதிர்க்கிறார்கள். இடது சாரி கட்சிகள், நாத்திகர்கள், மதமாற்றும் சக்திகள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அரசியல் சக்திகள் தான் ரதயாத்திரையை எதிர்க்கிறார்கள். தமிழக அரசு 144 தடை உத்தரவு போட்டுள்ளது, 144 உத்தரவு ரத யாத்திரைக்கு இல்லையா என்று கேட்கிறார்கள். 144 தடை உத்தரவு மத சம்பந்தமான எந்த ஊர்வலங்களுக்கும் பொருந்தாது, இந்த யாத்திரையை தடை செய்ய முடியாது தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.

    அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது

    அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது

    யாத்திரைக்கு அனுமதித்தது மட்டுமின்றி யாத்திரையை எதிர்க்கின்ற இந்துக்களை சிறுபான்மையினராக்க முயற்சிக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்து விரோத சக்திகள் எதிர்ப்பதை அரசு தடை செய்திருக்கிறது. ராமராஜ்ஜியம் என்பது நேர்மையான, தூய்மையான ஆட்சி, இதனை விரும்புகின்றவர்கள் அனைவரும் நிச்சயமாக ஆதரிப்பார்கள், இதனை ஆதரிக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் மக்கள் யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என்றும் எச். ராஜா கூறியுள்ளார்.

    English summary
    BJP national secretary H.Raja condemns H.Raja those who were opposing Ramarajya ratha yatra and Says in his fb vidoe post even Gandhiji supported Ramarajyam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X