For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலினை நாமக்கல் திமுகவினரை போல் ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்- எச் ராஜா

ஸ்டாலினை நாமக்கல் திமுகவினரை போல் ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று எச் ராஜா தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டாலினை காலையில் கைது செய்து கல்யாண மண்டபத்தில் A/C ல் வைத்து விடுதலை செய்வதை விட்டு விட்டு ஒருமுறை நாமக்கல் திமுக வினரை போல் ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டினால் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் வந்த ஆட்சியரின் கார் மீது திமுகவினர் கருப்பு கொடிகளையும் கருப்பு பலூன்களையும் வீசி அடித்தனர்.

பேரணி

பேரணி

இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்றார்.

கைது செய்யப்பட்டார்

இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டார்.

7 ஆண்டுகள் கடுங்காவல்

இதுகுறித்து எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஒரு எதிர்கட்சி தலைவருக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும். இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 124 தெளிவாக கூறுகிறது ஜனாதிபதி/ஆளுநரின் மரியாதைக்கு குந்தகம் ஏற்படுத்த நினைத்தால் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உண்டு. நாமக்கல் காவல்துறை செயல் சட்டப்படி சரி.

எச் ராஜா கருத்து

எச் ராஜா கருத்து

காலையில் கைது செய்து கல்யாண மண்டபத்தில் A/C ல் வைத்து விடுதலை செய்வதை விட்டு விட்டு ஒருமுறை இவரையும் நாமக்கல் திமுகவினரை போல் ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

English summary
BJP National Secretary H.Raja demands to remand Stalin as the Namakkal DMK Cadres arrested for throwing black flags and balloons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X