For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணன் அழகிரி சொன்னது போல் 234 தொகுதிகளிலும் டெபாசிட் போனால் என்ன ஆகுமோ ஈஸ்வரா.. எச் ராஜா நக்கல்!

ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்து நண்பர் கொஞ்சம் டென்ஷனாகிவிட்டார் என ஸ்டாலினை எச் சாடியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்து நண்பர் கொஞ்சம் டென்ஷனாகிவிட்டார் என ஸ்டாலினை எச் சாடியுள்ளார். மேலும் 234 தொகுதிகளிலும் திமுக டெபாசிட் இழந்தால் என்ன ஆகுமோ என்றும் அவர் டிவிட்டியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க கூட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது திராவிட கழகங்கள் இல்லாத தமிழகம் என கூறி வரும் பாஜகவை அவர் சராமாரியாக விளாசினார்.

களவாணிப் பசங்களா..

களவாணிப் பசங்களா..

பாஜகவை ஏய் களவாணிப் பசங்களா என்ற அவர் புறம்போக்காக இருக்கக்கூடிய நீயே ஒருமேடை போட்டு நின்று பேசக்கூடிய தெம்பை, திராணியை உருவாக்கித்தந்த மண் இந்த திராவிடமண் மறந்திடாதே என்றார்.

ஸ்டாலினுக்கு பதிலடி

ஸ்டாலினுக்கு பதிலடி

அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் இந்த பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

ஓவரா டென்ஷன் ஆயிட்டார்

ஓவரா டென்ஷன் ஆயிட்டார்

இதுதொடர்பாக எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில். ஒன்றுமில்லை ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து நண்பர் கொஞ்சம் ஓவரா டென்ஷன் ஆயிட்டார் என தெரிவித்துள்ளார்.

என்ன ஆகுமோ ஈஸ்வரா..

மேலும் தன் கவலை எல்லாம் அண்ணன் அழகிரி சொன்னது போல் 234 தொகுதிகளிலும் டெபாசிட் போனால் என்ன ஆகுமோ ஈஸ்வரா.. என்றும் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

எச் ராஜா நக்கல்

எச் ராஜா நக்கல்

ஆர்கே நகர் தேர்தல் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஸ்டாலின் தலைமை இருக்கும்வரை திமுக வெற்றி பெறாது என விமர்சித்திருந்தார். அதனை வைத்து எச் ராஜா தற்போது ஸ்டாலினை நக்கல் அடித்துள்ளார்.

English summary
BJP national secratary H Raja reacting for stalin attack on BJP. He has said that after RK Nagar election result stalin tensed little.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X