For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம் பண்பாட்டில் கருப்பு மங்களகரமானது... எச். ராஜா புது விளக்கம்!

கருப்பு நிறம் நம் பண்பாட்டை பொருத்தவரை மங்களகரமானது என்று பாஜக தேசயி செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலின், வைகோவுக்கு எதிராக பேசும் ஹெச்.ராஜா- வீடியோ

    சென்னை: கருப்பு நிறம் நம்முடைய பண்பாட்டை பொருத்தவரை மங்களகரமானது என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார். கருப்பு துக்ககரமானது என்பது பிரிட்டிஷ் மனநிலையையே காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை தொடங்கியுள்ளார். 4வது நாளாக ஸ்டாலினின் நடைபயணம் இன்று திருவாரூர் மாவட்டத்தில் தொடங்குகிறது.

    நடைபயணத்தின் போது விவசாயிகள் மத்தியில் பேசிய ஸ்டாலின் ஏப்ரல் 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரும் போது அனைவரும் அவருக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அனைவரும் கருப்பு உடை அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    வைகோ ஆதரவு கருத்து

    வைகோ ஆதரவு கருத்து

    ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் வரும்போது கருப்புக்கடலாக காட்சியளிக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

    எதிர்க்கட்சிகள் ஒத்த கருத்து

    எதிர்க்கட்சிகள் ஒத்த கருத்து

    எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று சொல்லி வருகின்றன. ஆளும் கட்சியான அதிமுகவோ ஆச்சரியமளிக்கும் பதிலை சொல்லியுள்ளது.

    அதிமுக நினைப்பது என்ன?

    அதிமுக நினைப்பது என்ன?

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இது பற்றி கருத்து கூறியுள்ளார். பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கருப்புக்கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக்கொடி காட்டுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    எச். ராஜா பதில்

    எச். ராஜா பதில்

    இதனிடையே கருப்புக்கொடி காட்டுவது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் சென்னை வரும்போது திமுக கருப்புக்கொடி காட்டும் என ஸ்டாலின் அறிவித்துள்ளது கருப்பு துக்ககரமானது என்கிற பிரிட்டிஷாரின் எண்ணத்தையே காட்டுகிறது.

    மங்களகரமானது கருப்பு

    நம் பண்பாட்டை பொருத்தவரை கருப்பு மங்களகரமானது. சுமங்கலிப் பெண்கள் கருகமணி அணிவது நம் பண்பாட்டின் அம்சமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    English summary
    BJP national secretary H. Raja says black is not a color of sadness, black is a good vibration in our culture as women were wearing Karrugamani is our tradition it marks the holiness he added in his tweet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X