For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மது, மாது, பீஃப் ஆறாக ஓடியது- மீண்டும் சர்ச்சையில் எச் ராஜா

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய எச்.ராஜா

    வேடசந்தூர்: ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மது, மாது, பீஃப் ஆகியன ஆறாக ஓடியது என மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பேசியுள்ளார்.

    புதுக்கோட்டையில் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது தேவாலயத்துக்கு பக்கத்தில் மேடை அமைக்க வேண்டும் என்று எச் ராஜா போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார்.

    அப்போது ஹைகோர்ட் உத்தரவுபடி இங்கு மேடை அமைக்கக் கூடாது என கூறிய போலீஸாரிடம் வெட்கம் இல்லையா, லஞ்சம் தரேன் என மிகவும் அவதூறாக பேசினார். அதோடு ஹைகோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

    போன் செய்து பேச்சு

    போன் செய்து பேச்சு

    இந்நிலையில் எச் ராஜா வேடசந்தூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு சென்ற நம் கட்சி பெண் நிர்வாகி ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார்.

    மெரினா புரட்சி

    மெரினா புரட்சி

    அப்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஊடகங்களுக்கு காட்டுவதை தாண்டி வேறு சில விஷயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன என்றார். அப்போது என்ன என கேட்டதற்கு மெரினா போராட்டம் புரட்சி அல்ல.

    டுவீட் போட்டேன்

    டுவீட் போட்டேன்

    மாறாக மது, மாது, பீஃப் என ஆறாக ஓடியது என்றார். மேலும் அங்கு சேலை கட்டிய பெண்களுக்கு அனுமதி இல்லையாம். இந்த நிர்வாகி ஜீன்ஸ் போட்டுக் கொண்டு அங்கே சென்றதால் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்துதான் நான் டுவீட் போட்டேன் என்றார் எச் ராஜா.

    பேப்பர்

    பேப்பர்

    திருமயத்தில் சர்ச்சையில் சிக்கிய எச் ராஜா தற்போது வேடசந்தூரிலும் சிக்கியுள்ளார். வேடசந்தூரில் எச் ராஜா பேசுவதற்கு முன்னர் பாஜக நிர்வாகி ஒருவர் பேசுகையில் எச் ராஜா தலைமறைவு என்று செய்தி வெளியிட்ட பேப்பரை காண்பித்து எங்க சிங்கம் இங்கதான் இருக்காரு என்றார்.

    English summary
    H.Raja says that there were wrong activities have done in Marina Revolution. The woman who wears saree was not allowed to that revolution.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X