For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 வாரத்திற்குள் எச் ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!

உயர்நீதிமன்றத்தை இழிவான வார்த்தைகளால் விமர்சித்த எச் ராஜா 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    எச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு- வீடியோ

    சென்னை: நீதித்துறையை இழிவான வார்த்தைகளால் விமர்சித்த எச் ராஜா 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    புதுக்கோட்டை அருகே நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச் ராஜா உயர்நீதிமன்றத்தையும் போலீசாரையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தார்.

    அவரது இந்த பேச்சு குறித்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக எச் ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கறிஞர்கள் கோபம்

    வழக்கறிஞர்கள் கோபம்

    நீதிமன்றத்தை இழிவாக பேசியதால், எச்.ராஜா மீது வழக்கறிஞர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் எச்.ராஜாவிற்கு எதிராக வழக்கு தானாக முன்வந்து விசாரிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஹுலுவாடி ரமேஷ் அமர்வு

    ஹுலுவாடி ரமேஷ் அமர்வு

    ஆனால் எச்.ராஜாவுக்கு எதிராக தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு எச் ராஜா குறித்து தாமாக விசாரிக்க மறுத்துவிட்டது.

    கோரிக்கை நிராகரிப்பு

    கோரிக்கை நிராகரிப்பு

    அவர் மீது வழக்கு தொடுக்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனால் 3 வழக்கறிஞர்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

    வழக்கு தொடர அனுமதி

    வழக்கு தொடர அனுமதி

    அதேசமயம், எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது. அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ஆஜராக உத்தரவு

    ஆஜராக உத்தரவு

    இந்நிலையில் நீதிபதிகள் சிடி செல்வம், நிர்மல் குமார் அமர்வு எச் ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் கட்டாயமாக ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் அந்த அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    நேரில் ஆஜராக உத்தரவு

    நேரில் ஆஜராக உத்தரவு

    நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக விசாரிக்க மறுத்த நிலையில் சிடி செல்வம் அமர்வு புகாரை தாமாக விசாரணைக்கு எடுத்து, எச் ராஜா நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

    English summary
    Chennai high court orders H Raja should be appeared in high court within four weeks. Justice CD Selvam bench has ordered on the case of H Raja.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X