For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரியார் முதல் ஹைகோர்ட் வரை... எச் ராஜா பேசாத பேச்சே இல்லை!

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா பெரியார் முதல் ஹைகோர்ட் வரை பேச்சாத பேச்சுகள்தான் உண்டோ? இவற்றில் ஒன்றன் மீது கூட வழக்கு பதியவில்லை.

எச் ராஜா என்றால் முரண்பாடுகளின் மொத்த உருவமாகவே காட்சியளிக்கிறார். இத்தனை ஆண்டுகளாக சிலருக்கு மட்டுமே பரீட்சயமான அவர் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அவரை கையில் பிடிக்கமுடியவில்லை.

சர்ச்சை ஏற்படும், பிரச்சினை வெடிக்கும் என்று தெரியாமல் சில பேச்சுகளை அவர் கூறி வருகிறாரா. அல்லது பிரச்சினை வரட்டும் என எதிர்பார்க்கிறாரா என்பதே தெரியவில்லை. லைம்லைட்டுக்கு ஆசைப்பட்டு இதுபோல் செய்கிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

மெர்சல் படம்

மெர்சல் படம்

மெர்சல் படத்தில் விஜய் ஜிஎஸ்டி குறித்து பேசும் வசனத்துக்கு எச் ராஜாவும் தமிழிசையும் கொந்தளித்தனர். விஜய்யின் வாக்காளர் அட்டையை தோண்டி எடுத்து ஜோசஃப் விஜய்க்கு மோடி மீதான கோபமே படத்தின் வசனம் என்று நெருப்பை கக்கினார். படத்தில் நடித்தவர் விஜய், அந்த வசனத்தை யாரோ எழுதி கொடுத்து விஜய் பேசினார் என்பது சினிமா பார்க்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று எச் ராஜாவுக்கு தெரியவில்லை போலும். இதற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது சாமானியர்களும் திட்டி தீர்த்து விட்டனர்.

வைரமுத்துவை தாக்கி பேசிய எச் ராஜா

வைரமுத்துவை தாக்கி பேசிய எச் ராஜா

ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக ஒரு பூதம் கிளம்பியது. அதற்கு அவர் வருத்தம் தெரிவித்த பிறகு விடாத எச் ராஜா என்னவெல்லாம் பேசினார் தெரியுமா. வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டத்தை நடத்திய அவர் பேசுகையில் ஆண்டாள் குறித்து எந்த வார்த்தையை பேசினாரோ அப்படிப்பட்ட பின்னணியில்தான் பேசியவர் (வைரமுத்து) வந்திருக்கிறார். அவருக்கு இப்படிப் பேச எப்படி தைரியம் வந்தது. நாம் மானங்கெட்டு போயிருப்பதால், ஒரு வெட்டிப் பய வைரமுத்து இப்படி பேசியிருக்கிறார் என்கிறேன் நான்... மனைவியை விட்டு கவிதை எழுத சொல்லி அதை புத்தகமாக்கி வியாபாரம் செய்யும் நீயெல்லாம் கவிப்பேரரசா? என்று கொஞ்சமும் நாகூசாத சொற்களை பேசினார்.

பெரியார் சிலை உடைப்பு

பெரியார் சிலை உடைப்பு

திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள லெனின் சிலை அகற்றப்பட்டது. இதுகுறித்து எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை , நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமியின் சிலை என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். பின்னர் இது தான் போட்ட டுவீட் இல்லை என்றும் தனது அட்மின் தனக்கு தெரியாமல் போட்டார் என்றும் பிதற்றினார்.

கருணாநிதி குறித்து பேச்சு

பெண் நிருபரின் கன்னத்தில் தட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை கனிமொழி கண்டித்தார். அதற்கு எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே என்று மிகவும் கொச்சையாக பேசியிருந்தார்.

எச் ராஜா கண்டனம்

எச் ராஜா கண்டனம்

புதுக்கோட்டையில் பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எச் ராஜா போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் அவர் பேசுகையில் போலீஸ் மொத்தமும் கரப்ட் (ஊழல்). போலீஸோட ஈரல் 100 சதவிகிதம் அழுகி போச்சு. நான் இங்க இருக்குற இந்து வீடு வழியா போறேன். முடிஞ்சா தடுத்து பாரு. ஹைகோர்ட்டாவது.. $%^#$ (கெட்டவார்த்தை). இன்னைக்கு புழல் சிறையில யாரை கைது பண்ணி இருக்காங்க சொல்லுங்க. நீ இந்துவை டார்ச்சர் பண்ணுற. நீ இந்துவா?

கொச்சையான வார்த்தையை பிரயோகித்த ராஜா

நான் இப்ப ஸ்டேஜ் போடுறேன், முடிஞ்சா தடுங்க, கிறிஸ்துவர், முஸ்லிம், பாதிரியார் கைகுலி நீங்கதான். போலீசுக்கு வெட்கமா இல்லை. பயங்கரவாதிக்கு துணை போறீங்க நீங்க. வெட்கமாக இல்லை, நான் கொடுக்குறேன் லஞ்சம். ஹைகோர்ட்டாவது ----------- (தகாத வார்த்தை), என்று மிகவும் மோசமாக அநாகரீகமாக பேசியுள்ளார்.

கெஞ்சும் போலீஸார்

கெஞ்சும் போலீஸார்

இத்தனை கேவலமாக எச் ராஜா பேசியும் அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் அவரிடம் போலீஸார் கெஞ்சியபடியே பேசினர். ஒரு ஹெல்மெட் போடாவிட்டால் விதியை மீறுகிறீர்கள் என்று கூறி அவர்களை கேவலமாக பேசும் போலீஸார் இது போன்ற சம்பவங்கள் அனுமதித்தது ஏனோ.

English summary
H. Raja speaks about Periyar to Highcourt judges vulgarly. But none of the action passed against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X