For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பண மதிப்பு சரிவு.. தப்பான தகவலை ட்விட் செய்து நெட்டிசன்கள் கேலி, கிண்டலுக்கு உள்ளான எச்.ராஜா

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74 என்ற அளவுக்கு சரிவடைந்தது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்து கடும் கேலிக்கு உள்ளாகி வருகிறது.

நேற்று, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.0950 ரூபாயாக சரிந்தது. இது இதுவரை இல்லாத சரிவாகும். முன்னதாக, 2016, நவம்பர் 24ம் தேதி, அதாவது, பண மதிப்பிழப்பு அறிவித்த பிறகு சில தினங்கள் கழித்து, இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.68.65 என்ற அளவுக்கு சரிந்ததுதான் அதிகபட்ச சரிவாக இருந்தது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய பொருளாதார நிலையை பண மதிப்பு சரிவு எடுத்துக் காட்டுகிறது என கூறியிருந்தார்.

இதை ரீட்விட் செய்த எச்.ராஜா, மன்மோகன்சிங் காலத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 74 ரூபாய் அளவுக்கு சரிவடைந்தது என கூறியுள்ளார். அனைத்து மீடியாக்களுமே வரலாறு காணாத வீழ்ச்சி இதுதான் என நேற்றைய பண மதிப்பு சரிவு பற்றி செய்தி வெளியிட்ட நிலையில், ராஜா மட்டும் இப்படி கூறுவதை பார்த்த நெட்டிசன்கள், அதற்கான ஆதாரத்தை தருமாறு ட்வீட் செய்தபடி உள்ளனர்.

அவரது ட்வீட்டுக்கு பின்னூட்டமாக நிறைய விமர்சனங்கள், கேலிகள் உலவுகின்றன.

பண மதிப்பு கிராப்

பண மதிப்பு நிலவரத்தை கிராப் மூலம் ராஜாவுக்கு பின்னூட்டம் அளித்து, எப்போது ரூ.70ஐ தாண்டியது என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

இலங்கை ரூபாய்ப்பா

"என்னப்பா ஆளாளுக்கு அவரை கலாய்க்றீங்க, அவர் சொன்னது ஸ்ரீலங்கன் ரூபாய். என்ன அட்மின் சரியா" என்கிறார் இந்த நெட்டிசன்.

கூச்சமே இல்லாமல் சொல்வதா

"அது எப்படிதான் வெக்கமே இல்லாம பேசுறீங்களோ,.,,,ச்ச்சை" என்கிறார் இந்த நெட்டிசன்.

பாகிஸ்தானா, இலங்கையா

இதுதான் அதிகபட்ச ரூபாய் வீழ்ச்சி. 70 ரூபாயை எப்போதுமே தாண்டியதில்லை. பாகிஸ்தான் அல்லது இலங்கை ரூபாயை குறிப்பிடுகிறீர்களா என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

English summary
H.Raja trolled by netizens for depending rupee crash by saying Manmohan regime has met bad rupee crash than now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X