For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாருக்கும் வெட்கமில்லை: எச்.ராஜா யாரை சொல்கிறார் தெரியுமா?

யாருக்கும் வெட்கவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை ஐஐடி விழாவில் தேசிய கீதத்துக்கு பதில் சமஸ்கிருத பாடல்- வீடியோ

    சென்னை: சென்னை ஐஐடியில் சமஸ்கிருதத்தில் பாடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்த பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா யாருக்கும் வெட்கமில்லை என்றார்.

    கிண்டியில் உள்ள ஐஐடியில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    H.Raja tweet about Stalin

    பொதுவாக மத்திய அரசு நிறுவனங்களில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுதான் மரபு. ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஐஐடியில் தேசிய கீதத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் இசைக்கப்பட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் செய்த பதிவில் சென்னை ஐஐடி.யில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்ட விழாவில் உலக வழக்கொழிந்த சமஸ்கிருதத்தில் மதம் சார்ந்த இறைவணக்க பாடல் இசைக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் இதுபோன்ற செயலை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    ஸ்டாலின் கண்டனத்துக்கு பதில் அளிக்கும் வகையில் எச்.ராஜா தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில் ஸ்டாலின் மகள் நடத்தும் ஸன் ஷைன் பள்ளியில் குழந்தைகள் தமிழில் பேசினால் அபராதம். இவர் IIT பற்றி பேசலாமா? யாருக்கும் வெட்கமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    BJP National Secretary H.Raja tweets that in Stalin's daughter school, if any kid speak in tamil then they impose penalty. How Stalin talk about IIT Sanskrit issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X