For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிலை கடத்தலில் தேசிய கட்சி பிரமுகருக்கு தொடர்பாம்.. எச்.ராஜாவுக்கு கடும் கோபம்!

சிலை கடத்தல் பிரச்சனையில் தொடர்புடைய தேசிய கட்சி பாஜக கிடையாது, இதில் சம்பந்தப்பட்டவர்களை தூக்கிலிடவேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: சிலை கடத்தல் பிரச்சனையில் தொடர்புடைய தேசிய கட்சி பாஜக கிடையாது, இதில் சம்பந்தப்பட்டவர்களை தூக்கிலிடவேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இதை வைத்து நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.

சில கடத்தல் பிரச்சனை தற்போது தமிழகத்தில் உச்சத்தை அடைந்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக அரசு இதில் சரியாக செயல்படவில்லை என்று வெளிப்படையாக கூறினார். அதேபோல் தேசிய கட்சி ஒன்றும் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாக பகீர் குற்றச்சாட்டு வைத்தார்.

 பெரும் தேசிய புள்ளி

பெரும் தேசிய புள்ளி

முன்னாள் சிலை கடத்தல் சிலை கடத்தல் தடுப்பு ஐஜி பொன். மாணிக்கவேல் சிலை கடத்தலின் பின்னணியில் தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் இருப்பதாக கூறினார். மேலும் அரசு தன்னை சரியாக பணி செய்ய விடுவதில்லை என்று நீதிமன்றத்தில் கூறினார். இவர் தேசிய புள்ளி என்று கூறியது யார் என்று எல்லோரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

ராஜா கருத்து

இந்த நிலையில் இந்த சிலை கடத்தல் பிரச்சனை குறித்து பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தனது டிவிட்டரில் '' நிச்சயமாக சிலைகள் திருடியது அல்லது துணை போனது யாராக இருந்தாலும் தூக்கில் போடனும். முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்த தேசியக் கட்சி பிரமுகர் ஒருவர் இதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.அந்த தேசியகட்சி பாஜக அல்ல. விரைவில் உண்மை வெளிவரும்.இதற்கான போராட்டம் தொடரும்'' என்று கோபமாக கூறியுள்ளார்.

அவரே தானாக வந்து

இந்த நிலையில் இதை வைத்து பலரும் கிண்டல் செய்துள்ளனர். எச். ராஜா ஏன் தானாக அவரே வந்து அந்த தேசிய கட்சி பாஜக இல்லை என கூறுகிறார் என்று கேலி செய்து இருக்கிறார்.

இந்த பக்கம்

இவர் ''சிலை திருட்டில் தமிழக தேசிய செயலாளருக்கு முக்கிய பங்கு உண்டு. எச். ராஜா: நாம இந்த பக்கம் போவோம்...'' என்று கிண்டல் செய்துள்ளார்.

English summary
BJP H Raja tweet about Statue Smuggling, Netizens toasted him by asking too many questions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X