For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸ் பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனு!

By Mathi
Google Oneindia Tamil News

ன்னை: கொலை மற்றும் வெடி குண்டு வழக்குகளில் தொடர்புடையதாக அறிவிக்கப்பட்ட தீவிரவாதி போலீஸ் பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேசிய லீக் கட்சி பொதுச்செயலர் தடா ரஹீம் சார்பில் வழக்கறிஞர் புகழேந்தி இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தி தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் (பொறுப்பு) வீட்டுக்கு சென்று அவரிடம் ஒரு மனு கொடுத்தார்.

Police Fakruddin

அதில், போலீஸ் பக்ருதீனை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரை என் கவுண்டர் செய்யவும் போலீசார் முடிவு செய்து இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவசர ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம். இதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இதை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்றார்.

இதை தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்டார். இந்த வழக்கை பொறுப்பு நீதிதிகள் சத்ய நாராயணா, ஆறுமுகசாமி ஆகியோர் விசாரிப்பார்கள் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

வேலூரில் விசாரணை

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது 3 வழக்குகளில் போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவரிடம் வேலூரில் வைத்து விசாரணை நடைபெறுகிறது என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் பக்ரூதின் கைது தொடர்பாக அறிக்கையைத் தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

English summary
A special bench of the Madras high court is to have a special sitting this afternoon to hear the habeas corpus petition for Fakruddin, allegedly under police custody.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X