For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்கள் பேங்க் கணக்கிலுள்ள பணத்தை அபேஸ் செய்ய பேஸ்புக்கிலுள்ள தகவலே போதும்! மோசடி நடப்பது இப்படிதான்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளில் இருந்து டெபிட் கார்டு மூலம் சமீபத்தில், பல கோடி பணம் சுருட்டப்பட்ட சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறு பணம் திருடுவதில் ஹேக்கர்களுக்கு உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் முக்கிய கருவியாக பயன்படுகிறது. பேஸ்புக்கில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த நாள் தினம், மற்றும் உங்கள் செல்போன் எண் இந்த திருட்டின் மூல காரணம்.

Hackers using Facebook datas, warns cyber crime police

சமீபத்தில் சைபர் கிரைம் போலீசார் எடுத்த ஆய்வில், 75 சதவீதம் சைபர் குற்றவாளிகள், படித்த இளைஞர்களாகவே இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. எந்த இணையதளத்தை எப்படி முடக்கலாம் என்பது இவர்களுக்கு அத்துப்படியாம்.

மோசடி நடப்பது இப்படித்தான்:

  • பேஸ்புக் கணக்கை ஹேக் செய்யும் சைபர் குற்றவாளிகள் அதில் இருந்து, பிறந்த தேதி, செல்போன் நம்பர், பெயரை எடுத்துக்கொள்வார்கள்.
  • செல்போன் திருடுபோனதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பார்கள். காவல் நிலையத்தில் ஒரு எப்.ஐ.ஆரை பெற்று, புதிய சிம்கார்டுகளை உங்கள் செல்போன் நம்பரில் பெறுவார்கள். அதை வைத்து உங்கள் ஆன்லைன் வங்கி கணக்கை திறப்பார்கள்.
  • பேஸ்புக் தகவலை வைத்து போலியான பான் கார்டு பெற்று, ஆன்லைன் வங்கி கணக்குகளை முடக்குவார்கள்.
  • வங்கி ஆன்லைன் பாஸ்வேர்ட் மறந்துவிட்டதாக கூறி, புதிய பாஸ்வேர்ட் கேட்பார்கள். வங்கிகள் வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பும் பாஸ்வேர்ட் ரீ-செட்டிங் பார்மட்டை கொண்டு புது பாஸ்வேர்டை உருவாக்குவார்கள்.
  • பிறகு என்ன..? உங்கள் வங்கி கணக்கிலிருந்து ஆன்லைன் மூலமாக பணி பரிமாற்றத்தை எளிதாக முடித்துவிடுவார்கள்.
  • இந்த பிரச்சினையை தீர்க்க பேஸ்புக்கில் உங்கள் பிறந்த நாள், தேதி, வருடம், செல்போன் எண் போன்றவற்றை பதிவிடுவதை தவிருங்கள்.
English summary
Hackers using Facebook datas to get the money from their account, warns cyber crime police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X