For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலம் வந்தார் கேரள மாணவி ஹாதியா! கணவரை பார்க்க முடியாதாம்.. கல்லூரி தாளாளர் கல்பனா!

மதம் மாறி திருமணம் செய்துக்கொண்ட கேரள மாணவி ஹாதியா சேலம் வந்தடைந்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    என் கணவரை சந்திக்க வேண்டும்....ஹதியா!- வீடியோ

    சேலம்: மதம் மாறி திருமணம் செய்துக்கொண்ட கேரள மாணவி ஹாதியா சேலம் வந்தடைந்தார்.

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் சேலம் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார். இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

    இதுதொடர்பான வழக்கு உச்சநிதமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஹாதியா சேலம் ஹோமியோபதி கல்லூரியில் தனது படிப்பை தொடர உச்சநீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.

    விமனம் மூலம் கோவை

    விமனம் மூலம் கோவை

    மேலும் கல்லூரி டீன் தான் மாணவியின் கார்டியன் என்றும் மாணவியின் முழு பாதுகாப்புக்கும் அவர் தான் பொறுப்பு என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து மாணவி ஹாதியா டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வந்தார்.

    சாலை மார்க்கமாக சேலம்

    சாலை மார்க்கமாக சேலம்

    அவருக்கு கோவை விமான நிலையத்தில் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளிக்க கூடின. ஆனால் போலீசார் பாதுகாப்பாக அவரை வாகனத்தில் ஏற்றி சாலை மார்க்கமாக சேலம் அழைத்து வந்தனர்.

    ஹோமியோபதி கல்லூரிக்கு வந்துள்ள மாணவி ஹாதியா தனது படிப்பை தொடரவுள்ளார்.

    கணவர் சந்திக்க வாய்ப்பில்லை

    கணவர் சந்திக்க வாய்ப்பில்லை

    இதனிடையே சேலம் ஹேமியோபதி கல்லூரியில் தங்கி படிக்கவுள்ள ஹாதியாவை அவரது கணவர் சந்திக்க வாய்ப்பில்லை என கல்லூரி தாளாளர் தெரிவித்துள்ளார். சேலம் ஹோமியோபதி கல்லூரி மகளிர் விடுதி என்பதால் ஹாதியாவின் கணவரை சந்திக்க வாய்ப்பில்லை என்றும் கல்லூரி தாளாளர் கல்பனா கூறியுள்ளார்.

    சேலம் துணை ஆணையர்

    சேலம் துணை ஆணையர்

    இதனிடையே சேலத்தில் தங்கி படிக்கவுள்ள ஹாதியாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என சேலம் துணை ஆணையர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி பாதுகாப்பு வழங்கப்படும் என சேலம் துணை ஆணையர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

    English summary
    Hadiya reached Salem Homeopathy college after the permission of supreme court. Hadiya going to continue her study in the college.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X