For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவர்களே உங்களுக்கு ஒரு நல்ல செய்தி!... ஒரு கெட்ட செய்தி!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், தேர்வுகளை முடித்து டிசம்பர் 22 முதல் விடுமுறை விடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை விட்டும் வெள்ளநீர் வடியாத காரணத்தினாலும், பெரும்பாலான பள்ளிகள் முகாம்களாக செயல்படுவதாலும் அந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 19 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின்னர் பள்ளிக்கு கிளம்பிய மாணவர்களோ, நமக்கு மட்டும் லீவு இல்லையே? அரைப்பரிட்சை நமக்கு மட்டும் வைச்சிருவாங்களோ என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை விடுமுறைக்குப் பிறகு தொடர் மழை காரணமாக சென்னை, புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு வாரங்கள் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டது. அதன் பிறகு, பள்ளிகளும், கல்லூரிகளும் இன்று (வியாழக்கிழமை)தான் திறக்கப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து, மழைக்கால கோட் அல்லது குடை, காய்ச்சிய குடிநீர் ஆகியவற்றை மாணவர்கள் எடுத்துவர வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகங்கள் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பியுள்ளன.

வடியாத வெள்ளம்

வடியாத வெள்ளம்

வெள்ளம் வடியாத காரணத்தினாலும், முகாம்களாக செயல்படும் சென்னையில் 24 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று உறுதியாக தெரியவில்லை.

அரசுப் பள்ளிகள்

அரசுப் பள்ளிகள்

1. அரசு மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம்.
2. அரசு மேல்நிலைப் பள்ளி, வேளச்சேரி.
3. அரசு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி, ஆசிர்வாதபுரம், பிராட்வே.
4. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம்.
5. அரசு உயர்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம்.
6. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.
அரசு உதவிபெறும் பள்ளிகள்:
7. ராணி மெய்யம்மை மகளிர் மேல்நிலைப்பள்ளி. ராஜா அண்ணாமலைபுரம்.
8. ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளி. ராஜா அண்ணாமலைபுரம்.
9. மேரி கிளப்வாலா ஜாதவ் மேல்நிலைப்பள்ளி. எழும்பூர்
10. கோட்டி எம்.அப்புச்செட்டி உயர்நிலைப்பள்ளி. ஓட்டேரி.
11. புனித பிரான்சிஸ் சேவியர் உயர் நிலைப்பள்ளி. சைதாப்பேட்டை.

 அரசு - அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள்:

அரசு - அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள்:

12. அரசு தொடக்கப் பள்ளி. சிட்கோ நகர், வில்லிவாக்கம்.
13. அம்பத்தூர் லயன்ஸ் கிளப் நடுநிலைப்பள்ளி, சாலிகிராமம்.
14. திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி. சைதாப்பேட்டை.
15. அட்வெண்ட் கிறிஸ்டியன் தொடக்கப்பள்ளி. வேளச்சேரி.
16. சபேசன் பால பிருந்தா தொடக்கப்பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்.
17. புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளி, சின்னமலை.
18. புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளி, ஆயிரம் விளக்கு.
19. சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, ஆயிரம் விளக்கு.

 மாநகராட்சிப் பள்ளிகள்

மாநகராட்சிப் பள்ளிகள்

20. சென்னை நடுநிலைப் பள்ளி, அரும்பாக்கம்.
21. சென்னை தொடக்கப் பள்ளி, கோயம்பேடு.
22. சென்னை தொடக்கப் பள்ளி, பஜார் சாலை, சைதாப்பேட்டை.
23. சென்னை நடுநிலைப் பள்ளி, எம்.ஜி.ஆர். நகர்.
24. சென்னை நடுநிலைப்பள்ளி. திடீர் நகர். சைதாப்பேட்டை.

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 9 அரசு பள்ளிகளை தவிர, மற்ற பள்ளி மற்றும் கல்லுாரிகள், இன்று வழக்கம் போல் செயல்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்து உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று, மழைநீர் தேங்கியுள்ள, மழையால் பாதிக்கப்பட்ட, கீழ்க்காணும், 9 அரசு பள்ளிகளை தவிர, மற்ற பள்ளிகளும், கல்லுாரிகளும் வழக்கம் போல இயங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை விடப்பட்டுள்ளபள்ளிகள்

விடுமுறை விடப்பட்டுள்ளபள்ளிகள்

1. மவுலிவாக்கம் ஆதிதிராவிடர் உயர் நிலைப்பள்ளி

2. செம்மஞ்சேரி நடு நிலைப்பள்ளி

3. செம்மஞ்சேரி மேனிலைப்பள்ளி

4. மாங்காடு நடுநிலைப்பள்ளி

5. கீழ்ஒட்டிவாக்கம் நடுநிலைப்பள்ளி

6. திருமுடிவாக்கம் மேனிலைப்பள்ளி

7. கோவளம் உயர் நிலைப்பள்ளி

8. இடையாத்துார் தொடக்கப்பள்ளி

9. இரும்புலிச்சேரி தொடக்கப்பள்ளி

திருவள்ளூரில் 12 பள்ளிகள் விடுமுறை

திருவள்ளூரில் 12 பள்ளிகள் விடுமுறை

ஆவடி முனிசிபல் உயர் நிலைப்பள்ளி, ஆவடி ஹவுசிங் போர்டு பள்ளி, முகப்பேர் கிழக்கு ஆடவர் பள்ளி மற்றும் மகளிர் பள்ளி, புங்கத்தூர் ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் மகளிர் பள்ளி, மணவாள நகர், அயனம்பாக்கம், திருவொற்றியூர், முகப்பேர் மேற்கு, சுப்பாரெட்டி பாளையம், நாப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. பிற அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்றும் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

பிற மாணவர்கள் சோகம்

பிற மாணவர்கள் சோகம்

விடுமுறை விடப்பட்டுள்ள அரசு பள்ளிகளைத் தவிர பிற பள்ளி மாணவர்கள் அனைவரும் இன்று வழக்கம் போல பள்ளிகளுக்கு ஒரு வித சோகத்துடன் கிளம்பியுள்ளனர். நமக்கு ஏன் பள்ளிக்கூடம் வைக்கிறார். வெள்ளம் வரலையே ஏன் என்ற கேள்வியை எழுப்பி வரும் மாணவர்கள் அப்போ அரைப்பரிட்சை நமக்கும் மட்டும் வச்சிருவாங்களோ என்றும் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

திட்டமிட்டப்படி தேர்வுகள்

திட்டமிட்டப்படி தேர்வுகள்

மழை விடுமுறையால் அரையாண்டுத் தேர்வு தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து, விடுமுறை நாட்களைக் குறைக்க அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், விடுமுறையை ரத்து செய்யக் கூடாது என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்ததால், அரையாண்டுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ப்ளஸ் 2, 10ம் வகுப்பு

ப்ளஸ் 2, 10ம் வகுப்பு

நேற்று மாலை அவசர, அவசரமாக பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே அறிவித்த படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு டிசம்பர் 7ம் தேதியும்; 10ம் வகுப்புக்கு டிசம்பர் 9ம் தேதியும், மாற்றமின்றி தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.

டிசம்பர் 22 முதல் விடுமுறை

டிசம்பர் 22 முதல் விடுமுறை

இதேபோல், சமச்சீர் கல்வி பாடத் திட்டப்படி, 9ம் வகுப்புக்கு டிசம்பர் 9ம் தேதியும், 6 முதல், 8ம் வகுப்புகளுக்கு, டிசம்பர்14ம் தேதியும் இரண்டாம் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும். அனைவருக்கும் டிசம்பர் 22ல் தேர்வுகள் முடிக்கப்படுகிறது. இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தகமே இல்லையே

புத்தகமே இல்லையே

பெரும்பாலான மாணவர்களின் புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்ட பின்னரே அவர்களுக்கான பாடங்கள் நடத்தப்பட்டு அவர்கள் தேர்வுக்கு தயாராக முடியும், இதனால் இந்த தேர்வினை சரியாக எழுத முடியுமா என்று சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் பெற்றோர்கள்.

English summary
TN Education dept has ordered all the schools to conduct the half yearly exams as per planned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X