For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்கள் இனி செல்லாது.. மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள்!

Google Oneindia Tamil News

சென்னை: கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் மாற்றத்திற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகின்றது.

இதுகுறித்து வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில், "சர்வதே விமான போக்குவரத்துக்கழகம் கையால் எழுதப்பட்ட பாஸ் போர்ட்டை வரும் 24 ஆம் தேதிக்குள் மாற்றிக்கொள்வதற்கு காலக்கெடு விதித்துள்ளது.

Handwritten passports to be invalid from November 24

இக்காலக்கெடு முடிந்த பிறகும் இத்தகைய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்களுக்கு வெளிநாடு செல்ல விசா வழங்கப்பட மாட்டாது. 2001 ஆம் ஆண்டுக்கு பின்னர் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

2001 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் மற்றும் 1980-90 ஆம் ஆண்டுகளுக்கு இடையே வழங்கப்பட்ட 20 ஆண்டுகள் செல்லுப்படியாகும் பாஸ்போர்ட்டுகளும் செல்லாத பாஸ்போர்ட் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே, கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 24 ஆம் தேதிக்குள் புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளவேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக மேலும் விவரங்களை www.passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவைகள் இணையதளத்திலும், 18002581800 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

English summary
People holding handwritten passports and passports with a 20 year validity will not be issued visas by countries on 24th November onwards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X