For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று தந்தையர் தினம்... ஒவ்வொரு தந்தையும் பாராட்ட வேண்டிய "மகள்" சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட்!

Google Oneindia Tamil News

சென்னை: ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறு தந்தையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்பா என்றாலே கண்டிப்பு என்ற பிம்பம் மாறி, சமீபகாலமாக அப்பாக்களின் அன்பு குறித்த புரிதல் மக்களிடையே உருவாகத் தொடங்கியிருக்கிறது.

கருவில் பத்து மாதம் தன்னை சுமந்து பெற்ற தாயின் பாசத்திற்கு சற்றும் குறைவில்லாதது தந்தையின் பாசம் என்ற விழிப்புணர்வு மகன்கள் மற்றும் மகள்களிடம் ஏற்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

உலக தந்தையர் தினம்...

உலக தந்தையர் தினம்...

எனவே, தந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறு உலக தந்தையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம்போல, இந்த தினமும் மேலை நாட்டவர்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும், சமீபகாலமாக இது இந்தியாவிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாறு...

வரலாறு...

கடந்த 1909ம் ஆண்டு சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் தான், தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக்கூடாது என இவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காரணம்...

காரணம்...

தனது தாயாரின் மறைவுக்கு பின்னர், தந்தை வில்லியம் ஆறு குழந்தைகளை சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கியதை நினைவு கூறும் வகையில், தந்தையர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என இவர் வலியுறுத்தினார்.

விடுமுறை...

விடுமுறை...

இவரது முயற்சிகளின் பலனாக 1910ம் ஆண்டு முதன்முதலில் அமெரிக்காவில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் 1966ம் ஆண்டு இந்த தினத்திற்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1972ம் ஆண்டு, அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சன், தந்தையர் தினத்திற்கு விடுமுறை அறிவித்தார்.

ஜூன் 3வது ஞாயிறு...

ஜூன் 3வது ஞாயிறு...

தந்தையர் தினமானது நாட்டிற்கு நாடு வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நாடுகளில் இன்றைய தினமே தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள்...

தந்தையர் தினத்தையொட்டி பிள்ளைகள் தங்களது அப்பாக்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். எப்போதும் தன் ஆசைகளை மறைத்து குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் அப்பாவிற்கு பிடித்தமான பொருட்களை பரிசாக அளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

கவிதைகள்...

கவிதைகள்...

சமூகவலைதளங்களில் தந்தையர் தினக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. பலர் தங்களது புரொபைல் பிக்சர்களை மாற்றி, அப்பாக்களின் புகைப்படங்களை வைத்துள்ளனர். அதோடு, அப்பாக்களின் பாசத்தைப் பற்றிய கவிதைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

English summary
Today Father's day is celebrated all over the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X